எதையும் எடுக்க விடாம இரவு 2 மணிக்கு அனுப்பிட்டாங்க – பதவி நீக்கத்தின் அதிர்ச்சி பின்னணியை பகிர்ந்த ரமீஸ் ராஜா

Najam Sethi Ramiz Raja
- Advertisement -

2022ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ஃபைனலில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அத்துடன் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை சந்தித்த அந்த அணி சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக 4 தொடர் டெஸ்ட் போட்டிகளில் தோற்றதுடன் 4 – 3 (7) என்ற கணக்கில் டி20 தொடரிலும் இங்கிலாந்திடம் படுதோல்வி சந்தித்தது.

PAK Ramiz Raja

- Advertisement -

அந்த அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கு சுமாரான பிட்ச் அமைத்தது முதல் சொதப்பலான அணி தேர்வு செய்தது வரை முக்கிய காரணங்களாக இருந்த பாகிஸ்தான் வாரியார் தலைவர் ரமீஷ் ராஜா மற்றும் தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் ஆகியோர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் புதிய தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் தலைவர் நஜாம் செதி முன்னாள் வீரர் சாகித் அப்ரிடியை புதிய தேர்வுக்குழு தலைவராக நியமித்துள்ளார். முன்னதாக தொடர் தோல்விகள் மட்டுமல்லாது 2023 ஆசிய கோப்பை விவாகரத்தில் ஏற்கனவே விரிசலடைந்துள்ள இந்தியாவுக்கு எதிராக எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வகையில் ரமீஸ் ராஜா பேசியிருந்ததும் அவர் பதவி பறிபோவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நைட் 2 மணிக்கு:
குறிப்பாக பணக்கார இந்தியாவை டி20 உலக கோப்பையில் தோற்கடித்தோம், நாங்கள் பங்கேற்காமல் போனால் இந்தியாவில் நடைபெறும் 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார்கள் என்பது போன்ற அவரது கருத்துக்கள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரமீஸ் ராஜா ஏற்கனவே வைத்திருந்த தனது யூடியூப் சேனலில் மீண்டும் விமர்சகர் அவதாரத்தை எடுத்துள்ளார். அதனால் இந்தியா மற்றும் இந்திய ரசிகர்களுடன் கனிவாகப் பேசத்துவங்கியுள்ள அவர் நள்ளிரவு 2 மணிக்கு தாம் பதவி நீக்கப்பட்ட செய்தியை நஜாம் செதி ட்விட்டரில் தெரிவித்ததாகவும் 17 பேர் கொண்ட யாரென்றே தெரியாத குழுவினர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்குள் நுழைந்து தம்மை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் அதிர்ச்சி பின்னணியை கூறியுள்ளார்.

Ramiz Raja Sourav Ganguly

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் கிரிக்கெட் வாரியத்திற்குள் நுழைந்து அட்டாக் செய்தார்கள். குறிப்பாக என்னுடைய உடைமைகளை (பெட்டி படுக்கை) எடுப்பதற்கு கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. அன்றைய நாள் காலை 9 மணிக்கு 17 பேர் கொண்ட குழுவினர் எங்களது அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். அதனால் அவர்கள் பாகிஸ்தானின் ஃபெடரல் துப்பறியும் அதிகாரிகள் நமது அலுவலகத்தில் சோதனை நடத்த வந்துள்ளதாக நான் நினைத்தேன்”

- Advertisement -

“அவர்கள் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் குறைந்தவர்கள். இருப்பினும் புதிதாக பொறுப்பேற்ற கிரிக்கெட் குழுவினர் அவர்களை மிகவும் பவரான இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அனைவரும் அவர்கள் முன்னே தொடர்ந்து பவுலிங் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள். அதை விட தலைவர் ஒருவர் மாறியதற்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் வாரியமும் மாறிய கொடுமை இங்கு அரங்கேறியுள்ளது. இப்படி கூண்டோடு மாற்றப்பட்ட நிகழ்வுகளை நான் உலகில் எங்கும் கண்டதில்லை. குறிப்பாக நஜாம் செதிக்காக மொத்த நிர்வாகமும் இங்கே அட்ஜஸ்ட் செய்து கொண்டுள்ளது”

Ramiz-raja

“மேலும் பாகிஸ்தானுக்கு நிறைய வெளிநாட்டு அணிகள் வந்து விளையாடும் இந்த சமயத்தில் இதை செய்துள்ள நீங்கள் தேர்வுக்குழு தலைவரையும் அதிரடியாக நீக்கியுள்ளீர்கள். குறிப்பாக தேர்வுக்குழு தலைவர் முகமது வாசிம் சிறப்பாக செயல்பட்டாரோ இல்லையோ ஆனால் அவர் நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியவர். அப்படிப்பட்ட அவருக்கு நீங்கள் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை. அத்துடன் நள்ளிரவு 2.15 மணிக்கு ரமீஸ் ராஜா தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக ட்வீட் போட்ட நஜாம் செதி எனக்கு வாழ்த்து தெரிவித்தார்”

இதையும் படிங்க: IPL 2023 : 10 டீம்ல ஒரு டீம் கூட என்னை எடுக்கல. என்னோட மனசே ஒடஞ்சிப்போச்சி – ஆதங்கத்தை பகிர்ந்த இந்திய வீரர்

“ஆனால் நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை பார்த்து மிகவும் மனமடைந்துள்ளேன். இப்போது வந்துள்ளவர்கள் வெளிப்புறத்தில் இருந்து மெசியா போல நடிக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்பதில் இல்லாமல் புகழ்பெற வேண்டும் என்பதில் உள்ளது வேதனையாகும்” என்று கூறினார்.

Advertisement