கோலியின் சாதனையை முறியடிக்க இவரால் மட்டுமே முடியும் – ரமீஸ் ராஜா ஓபன் டாக்

Ramiz-Raja
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

Kohli-2

- Advertisement -

இதனால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தற்போது தங்கள்து ஓய்வு நேரத்தை தங்களது வீட்டில் கழித்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அதுமட்டுமின்றி தங்களது வாழ்வில் நடந்த சுவாரசிய நிகழவுகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போதுபாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரமீஷ் ராஜா பாகிஸ்தான் வீரர் குறித்து கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வரை கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது பல சர்ச்சையான விஷயங்களை உளறிக் கொட்டுவது இவருக்கு புதிதல்ல.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பார்த்து மீண்டும் ஒரு புதிய வித்தியாசமான சர்ச்சையை கிளப்பியுள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்கு விராட் கோலியின் சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் அளவிற்கு திறமை இருக்கிறது என்று கூறுகிறார்.

இது குறித்து பேசிய அவர் கூறியதாவது : பாபர் அசாமிற்கு ஆற்றல் அதிகம். ஆனால் அவர் மனதை மிகவும் இலகுவாக வைத்திருக்கவேண்டும். தோல்வியை பற்றி சிந்திக்கக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும். ரன்களை எடுப்பது மற்றும் வெற்றிகளை பெறுவதைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். அப்படி நேர்மறையாக அவர் யோசிக்கும் பட்சத்தில் அவரால் இன்னும் நிறைய ரன்களை குவிக்க முடியும்.

- Advertisement -

இவ்வாறு இருந்தால் நீண்டகாலத்திற்கு விளையாடலாம். அவரைப் பொருத்தவரை வானமே எல்லை.
ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய ஒரு சூழ்நிலைய உருவாக்கிக்கொள்ள வேண்டும்.விராட் கோலி ஏற்கனவே நிறைய சாதித்து விட்டார். இந்தியாவில் அவர் ஜாம்பவான். தற்போது பாபர் அசாம் இந்த விட விராட் கோலியை விட திறமை படைத்தவர் என்று சர்ச்சையாக பேசியுள்ளார் ரமீஷ் ராஜா.

Babar

பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு பேசிக்கொள்வது புதிதல்ல. பல்வேறு காலகட்டத்திலும் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட வீரரை அவர்கள் உயர்த்தி பேசுவதும் அந்த வீரர் சோபிக்காமல் போனதும் நாம் கண்டதே.

Advertisement