நீங்களா ரிட்டயர்ட் ஆகுறீங்களா ? இல்ல நாங்களே அனுப்பி வைக்கட்டுமா ? – முன்னணி வீரரை வம்புக்கு இழுத்த பாக் கேப்டன்

Ramiz-Raja
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் இருவரை வேகமாக ஓய்வு பெறுங்கள் என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் விதமாக பேசியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா.
பாகிஸ்தான் அணிக்கு தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருபவர்கள் முகமது ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக்.

Pak-1

- Advertisement -

இருவருக்கும் கிட்டத்தட்ட தற்போது 40 வயது ஆகப்போகிறது. இருந்தாலும் தற்போது வரை பாகிஸ்தான் அணியின் டி20 தொடரில் இடம்பிடித்து ஆடி வருகின்றனர். இருவரில் ஒருவர் முகமது ஹபீஸ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் தான் ஓய்வினை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இருவரும் வெகு சீக்கிரம் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :இருவரும் சர்வதேச தொடர்களில் இருந்து முழுமனதாக மரியாதையுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் வெளியேறவேண்டும். இருவருமே பாகிஸ்தான் அணிக்காக பல ஆண்டுகளாக ஆடிவிட்டனர்.

malik

அந்த அணிக்காக பலவற்றை செய்துள்ளனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது ஒருமனதாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இருவரும் ஓய்வு பெறவேண்டும். அவர்கள் ஓய்வு பெற்று விட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட்டிற்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும். அடுத்து வரும் இளம் வீரர்களை தயார் செய்யலாம் என்று கூறியுள்ளார் ரமேஷ் ராஜா.

- Advertisement -

இளம்வீரர்கள் தங்கள் வாய்ப்புக்காக எத்தனை காலம் காத்திருப்பார்கள் அவர்களுக்காவது அவர்கள் தாங்களாக ஓய்வினை அறிவித்து வெளியேற வேண்டும் என்று பலரும் தெரிவித்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் பல ஆண்டுகள் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தாலும் வருங்காலத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கூறிவருகின்றனர்.

Hafeez

இதனால் சோயிப் மாலிக் மற்றும் ஹபீஸ் ஆகியோர் விரைவில் ஓய்வினை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களுக்கு முறையான வழியனுப்பும் தொடரினை வைத்து தகுந்த மரியாதையுடன் விடைகொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement