தோனி உன்னை அடிக்கனும் அதை பாக்கனும்.. ரோஹித் சர்மாவின் ஃபிரீடம் கேப்டன்ஷி பற்றி ரமன்தீப் பேட்டி

Ramandeep Singh
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அவரது தலைமையில் அறிமுகமாகி அசத்திய பல வீரர்களில் ரமந்தீப் சிங் ஒருவராக திகழ்கிறார். 2022 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை அணியில் அறிமுகமான அவர் ஆல் ரவுண்டராக ஓரளவு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ரோஹித் சர்மா தனது வீரர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கக்கூடிய சிறந்த கேப்டன் என்று ரமந்தீப் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2022இல் சென்னைக்கு எதிரான போட்டியில் தோனி அடித்தாலும் பரவாயில்லை வெற்றியை நாம் பார்க்க வேண்டும் என்று ரோஹித் சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சிறந்த கேப்டன்:

இது பற்றி ரமந்தீப் ஷிங் தெரிவித்தது பின்வருமாறு. “எனது பேட்டிங்கில் எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மிகப்பெரிய ரசிகர்களுக்கு முன்னிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பவுலிங் செய்வது போன்ற தருணத்தை உங்களது வாழ்வில் நீங்கள் எப்போதும் பார்த்திருக்க மாட்டீர்கள். எதிரணி பேட்ஸ்மேனுக்கு நல்ல நாளாக அமைந்தால் உங்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது”

“அப்படிப்பட்ட நிலையில் தோனி பேட்டில் செய்த போது ரோஹித் என்னிடம் பந்து கொடுத்தார். அப்போது உன்னை தோனி அடிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் சென்னை 7 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் ஒருவேளை நம்மை அடித்தால் நல்லது. ஒருவேளை அவர் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானால் நாம் வெற்றி பெறுவோம் என்று ரோஹித் என்னிடம் சொன்னார்”

- Advertisement -

கொல்கத்தாவில் ரமன்தீப்:

“அதற்கு முன்பாகவும் ரன்கள் போனால் பரவாயில்லை என்று ரோஹித் என்னிடம் கூறியிருந்தார். ரோஹித் மட்டுமே உங்களுக்கு இது போன்ற உணர்வையும் சுதந்திரத்தையும் கொடுக்கக்கூடிய ஒரே கேப்டனாக இருப்பார். அந்த சுதந்திரம் கேப்டனால் மட்டுமே உங்களுக்கு கொடுக்க முடியும். அந்த வகையில் ரோஹித் உண்மையான லீடர்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 6 மாசம் என்கிட்ட அர்ஜுன் டெண்டுல்கரை அனுப்புங்க.. அவரோட திறமை வேஸ்ட் பண்ணாதீங்க – யோக்ராஜ் சிங் கருத்து

அந்த நிலையில் இந்த வருடம் ரமந்தீப் கொல்கத்தா அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் கடந்த வருடமே ரோகித்தை கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை தங்களது புதிய கேப்டனாக நியமித்தது. அதனால் தற்போது ரோகித் சாதாரண பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement