சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவுக்கு பிறகு அசத்தலான சாதனையை நிகழ்த்திய – ரமன்தீப் சிங்

Ramandeep-and-SKY
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது தென்னாப்பிரிக்க நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இவ்விரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. இதன் காரணமாக மூன்றாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ரமன்தீப் சிங் நிகழ்த்திய சாதனை :

இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இடம்பிடித்து விளையாடியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு மூன்றாவது டி20 போட்டியில் ஒரே ஒரு மாற்றமாக 27 வயது வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ரமன் தீப் சிங்குக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார். அந்த வகையில் நீண்ட நாள் காத்திருப்பதற்குப் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியில் இடம் பிடித்திருந்தார்.

அப்படி அவர் அறிமுகமான முதல் போட்டியிலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். அந்த வகையில் இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் ஏழாவது வீரராக கடைசி கட்டத்தில் களமிரங்கிய ரமன்தீப் சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியின் முதல் பதிலேயே சிக்ஸர் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் யாதவுக்கு அடுத்து அவர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்கிட்ட சொல்லிட்டு உள்ள போயி தான் திலக் வர்மா இந்த சம்பவத்தை செய்ஞ்சாரு – சூரியகுமார் யாதவ் பாராட்டு

அதோடு இந்த போட்டியில் 6 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 250 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார் என்பது கூடுதல் சிறப்பம்சம். ஆனாலும் இந்த போட்டியில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு இறுதிவரை கிடைக்கவில்லை.

Advertisement