தானா சேர்ந்த கூட்டம்… மைதானம் முழுதும் திரண்ட ரசிகர்கள், நெகிழ்ச்சியில் வீரர்கள் – வீடியோ உள்ளே

dhoni
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்ச்சியில் ஈடுபடுவதற்காக நேற்று மாலை வீரர்கள் கடற்கரை சாலையில் அழைத்துவரப்பட்டனர்.இதை அறிந்த ரசிகர்கள் வீரர்கள் வரும் வாகனத்தின் முன்பும் பின்பும் கூடி வீரர்களை உற்சாகப்படுத்ததியபடியே மைதானத்திற்கு அழைத்துவந்தனர்.
Dhoni

சென்னை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடப்போவதை அறிந்த ரசிகர்கள் உடனடியாக மைதானத்தில் வளாகத்தில் மளமளவென்று குவிய, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் ரசிகர்களுக்கு கிரீன் சிக்னல் தந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதை காண உள்ளே அனுப்பினர்.

- Advertisement -

இந்த தகவல் சற்றுநேரத்தில் சமூகவலைத்தளங்களில் பரவ சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி உற்சாகப்படுத்தியுள்ளனர்.இதற்கிடையில் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்களும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் கையசைத்தும் நடனமாடியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
hussay

நேற்று மட்டும் வீரர்களின் பயிற்சியை காண சுமார் 10,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதாக கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.இரண்டாண்டு தடைக்கு பின்னர் இந்தாண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-இல் விளையாடவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த ஐபிஎல்-இன் முதல் ஆட்டத்திலேயே வலுவான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.வரும் ஏப்ரல் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் முதல் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement