விசில் அடிப்பதற்கா 1.5 கோடிக்கு வாங்குனிங்க? இளம் வீரருக்காக சென்னை நிர்வாகத்தை – விளாசும் ரசிகர்கள்

Bravo
- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-ஆவது வாரத்தை கடந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த தொடரில் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய ட்விஸ்ட் போல நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் அடுத்தடுத்த தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்தது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் பங்கேற்ற முதல் 7 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பெற்று வரலாற்றிலேயே முதல் 7 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த அணியாக மோசமான சாதனை படைத்தது.

அதன் காரணமாகவே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் மும்பை முதல் அணியாக வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதே போல 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த சென்னையும் பங்கேற்ற 7 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தவிக்கிறது. அதன் காரணமாக அந்த அணியும் மும்பையை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் 2-வது அணியாக சென்னை வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது.

- Advertisement -

மோசமான பவுலிங்:
இத்தனைக்கும் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் அந்த அணியின் இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் நம்பி வாங்கிய தீபக் சஹர் ஆரம்பத்திலேயே காயத்தால் விலகினார். அந்த நிலையில் மற்றொரு நம்பிக்கையாக இருந்த நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவும் காயத்தால் வெளியேறினார்.

சரி மீதமிருக்கும் பவுலர்களாவது காப்பாற்றுவார்கள் என எதிர் பார்த்தால் அதில் டுவைன் ப்ராவோ, பிரிட்டோரிசை தவிர கிறிஸ் ஜோர்டான் போன்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக கையிலிருந்த வெற்றியை எதிரணிக்கு பரிசளித்தனர். மொத்தத்தில் தீபக் சஹர் இல்லாததால் அவரைப் போன்ற வேறு ஒரு நல்ல தரமான அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலைமை சென்னைக்கு ஒவ்வொரு போட்டியிலும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர்:
ஆனாலும் கடந்த ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக அசத்திய ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரை அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து பென்சில் அமர வைத்துள்ளது சென்னை ரசிகர்களையே கடுப்பாக வைத்துள்ளது. ஆம் அந்த உலகக் கோப்பையில் அதிரடியாக பேட்டிங் செய்து பந்துவீச்சில் ஒரு சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்த காரணத்தாலேயே அவரை 1.5 கோடி என்ற நல்ல தொகைக்கு ஏலத்தின் போது சென்னை அணி நிர்வாகம் வாங்கியது.

அந்த வகையில் தீபக் சஹார் காயமடைந்தார் என தெரிந்ததும் முதல் போட்டியிலேயே அவரின் இடத்தில் இவர் விளையாடுவார் என்று பல முன்னாள் வீரர்களும் வல்லுநர்களும் ரசிகர்களும் கணித்தார்கள். ஏனெனில் சஹாரை போலவே அற்புதமாக பந்துவீசும் இவர் லோயர் ஆர்டரில் கணிசமாக அதிரடியான ரன்களை குவிக்கும் திறமையும் பெற்றுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் வாய்ப்பை அளிக்காத அந்த அணி நிர்வாகம் ஆடம் மில்னே போன்ற பவுலர் காயமடைந்தாலும் ஜோர்டான் போன்ற பவுலர் ரன்களை வாரி வழங்கினாலும் வாய்ப்பு தர மாட்டேன் என்பது போல் அடம் பிடித்து வருகிறது.

- Advertisement -

அடுத்த அபராஜித்:
இந்நிலையில் சென்னையின் கடந்த சில போட்டிகளாக ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ரசிக கூட்டத்தில் ஒருவராக சென்னை கொடியை கையில் பிடித்துக் கொண்டு வாயில் விசில் அடித்துக் கொண்டு சென்னைக்கு ஆதரவு கொடுத்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பளிக்காதது கூட பரவாயில்லை பெஞ்சில் கூடவா அவருக்கு இடமில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் ரசிகர்கள் இதற்குத்தான் 1.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று சென்னை அணி நிர்வாகத்தை விளாசுகின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் இதேபோல் தமிழக வீரர்களான அபராஜீத், சாய் கிசோர் போன்றவர்களை வெறும் பெயருக்காக வாங்கி பல வருடங்களாக வாய்ப்பளிக்காமல் பெஞ்சில் மட்டுமே அமர வைத்து இறுதியில் கழற்றி விட்டு அவர்களின் வாழ்க்கையை வீணடித்ததை போல இவரின் வாழ்க்கையையும் வீணடிக்க தயாராகிவிட்டீர்களா என்றும் நியாயமான கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க : தில்லுக்கு துட்டு ஹர்டிக் பாண்டியா! முதல் முறையாக எடுத்த அந்த தைரிய முடிவு, மாஸ் காட்டும் குஜராத் டைட்டன்ஸ்

அத்துடன் இப்போது சென்னை இருக்கும் நிலைமையில் தமிழக வீரர்களுக்கு தான் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில் குறைந்தது இவருக்காவது வாய்ப்பளியுங்கள் எனக்கூறும் ரசிகர்கள் இந்த இளம் திறமையான வீரரையும் அடுத்த அபரஜித்தாக மாற்றி விடாதீர்கள் என்று சென்னை அணியிடம் காட்டமாக கூறுகிறார்கள்.

Advertisement