- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அப்பா மாதிரி கண்டித்ததால் சேவாக் அழுதாரு.. சச்சின் தான் ரைட்டை மன்னிப்பு கேட்க விடல.. ராஜிவ் சுக்லா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அதே போல களத்திலும் களத்திற்கும் வெளியேயும் அவர் நல்ல மனிதராகவும் அறியப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டை இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கேட்கும் நிகழ்விலிருந்து காப்பாற்றியது பற்றி முன்னாள் மேனேஜர் மற்றும் தற்போதைய பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா பகிர்ந்துள்ளார்.

அதாவது வீரேந்திர சேவாக் அறிமுகமான ஆரம்பக் காலங்களில் ஜான் ரைட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போது இப்படி விளையாடக் கூடாது அவர் சொன்னதை சேவாக் கேட்கவில்லை. அதனால் அவருடைய தோளில் தள்ளிய ரைட் கோபத்துடன் கண்டித்தார். அதனால் கோபமடைந்த சேவாக் அவர் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் செய்தார்.

- Advertisement -

போராடிய சேவாக்:

அதை சச்சின் டெண்டுல்கர் தடுத்தது பற்றி சமீபத்திய பேட்டியில் சுக்லா பேசியது பின்வருமாறு. “அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் வீரேந்திர சேவாக்கை தள்ளினார். அதனால் சோகமடைந்த சேவாக் கிட்டத்தட்ட அழுதுக் கொண்டே அவர் தன்னைத் தள்ளியதாக என்னிடம் சொன்னார். அப்போது அனைத்து வீரர்களும் ஒன்றாக சேர்ந்து சேவாக்கிடம் ரைட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவெடுத்து என்னிடம் சொன்னார்கள்”

“அதை ஏற்றுக் கொண்ட நான் ஜான் ரைட் அறைக்கு சென்று நீங்கள் வீரர்களைத் தொடுவது அல்லது தள்ளுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது என்று சொன்னேன். அதற்கு சேவாக்கிடம் நான் செய்த அனைத்து விஷயங்களும் ஒரு தந்தை அல்லது குரு என்ன செய்வாரோ அதன் படியே செய்ததாக ரைட் சொன்னார். சேவாக்கிடம் குறிப்பிட்ட ஷாட்டை அடிக்காதீர்கள் என்று சொன்னேன். ஆனால் அதை மீண்டும் செய்த அவர் சதத்தை அடிக்கவில்லை”

- Advertisement -

காப்பாற்றிய சச்சின்:

“அதனால் கோபமடைந்த நான் ஒரு தந்தை அல்லது குருவாக அவ்வாறு செய்ததாக ரைட் சொன்னார். அதில் நியாயம் இருந்ததால் அவரது கருத்தை சேவாக்கிடம் சொன்னேன். அதை புரிந்து கொண்டாலும் சேவாக் விடாப்பிடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இருந்தார். அப்போது என்னை அழைத்த சச்சின் ஒருவேளை ரைட் மன்னிப்பு கேட்டால் அவர் வீரர்களிடம் தனது அதிகாரத்தை இழப்பார் என்று சொன்னார்”

இதையும் படிங்க: மொத்த வருமானத்தில் 2.7 கோடி 10%.. ஏழை மக்களுக்காக நெஞ்சை தொடும் அறிவிப்பை வெளியிட்ட ரிஷப் பண்ட்

“அந்த வகையில் சச்சின் எப்போதுமே விவேகமான ஆலோசனைகளைக் கொடுப்பார். அதை ஏற்றுக் கொண்ட நான் சேவாக்கிற்கு புரிய வைத்தேன். அதைப் புரிந்து கொண்ட சேவாக் பின்னர் ரைட் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை” என்று கூறினார். அந்த வகையில் மனதளவிலும் சச்சின் ஜாம்பவானாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -