இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் டெஸ்ட் போட்டிகளில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளில் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக அவர் சாதனை படைத்துள்ளார்.
அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் அசத்தி வரும் அவர் மேட்ச் வின்னராக அறியப்படுகிறார். அதன் 2025 ஐபிஎல் தொடரில் அவரை லக்னோ அணி 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் பவுண்டேஷன் என்னும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை துவங்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
நெஞ்சை தொடும் அறிவிப்பு:
2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிலிருந்து குணமடைய ஒரு வருடம் எடுத்துக் கொண்டு அவர் மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த சூழ்நிலையில் தன்னுடைய மொத்த வருமானத்தில் 10% தொகையை ஏழை மக்களுக்கு உதவ உள்ளதாக ரிஷப் பண்ட் அறிவித்துள்ளார்.
இதுப் பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியது பின்வருமாறு. “இன்று நான் இருக்கும் இடத்திற்கும் பெற்றுள்ள விஷயங்களுக்கும் கிரிக்கெட் எனும் அழகான விளையாட்டே காரணம். நான் பெற்றுள்ள அனைத்து விஷயங்களுக்கும் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களே காரணம். இந்த இடத்தில் இருப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன்”
10% வணிக வருமானம்:
“அது சில வருடங்களுக்கு முன்பாக விபத்தைக் கடந்து வந்தது இன்னும் எனக்கு அதிக நன்றி உணர்வை கொடுத்தது. உங்களுடைய அன்பு, ஆசிர்வாதங்கள், ஆதரவுக்கு நன்றி. வெற்றியையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டப் பாடமாகும். தற்போது இந்த இலக்கை மக்களின் முகத்தில் கொண்டு வருவதே எனது இலக்கு”
இதையும் படிங்க: 248க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா.. கபில் தேவுக்கு நிகராக ஜடேஜா வரலாற்று சாதனை
“திருப்பி கொடுப்பதைப் பற்றி நான் நிறைய சிந்தித்தேன். அதைச் செய்வதற்கு இதுவே சரியான நேரம். என்னுடைய வணிக வருமானத்தில் 10% தொகையை ரிஷப் பண்ட் பவுண்டேசனுக்கு அர்ப்பணிக்கிறேன். இது என்னுடைய கனவு ப்ராஜெக்ட்” என்று கூறினார். எடுத்துகாட்டாக 27 கோடி ஐபிஎல் சம்பளம் பெறுகிறார் என்றால் அதில் 2.70 கோடி ரூபாயை பண்ட் தனது அறக்கட்டளைக்கு கொடுக்க உள்ளார்கள். அந்தப் பணத்தில் ஏழைகள், ஆதரவற்றவர்கள், ஏழை மாணாக்கர்களின் கல்வி, மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு அவர் உதவி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.



