நாங்க ரோஹித் சர்மாவின் அந்த முடிவில் எந்த பிரஷரும் குடுக்கல.. இதுதான் உண்மை – ராஜிவ் சுக்லா விளக்கம்

Rajeev Shukla
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா தற்போது 2025 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவ்வேளையில் நேற்று திடீரென டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவேன் என்று கூறியிருந்தார்.

ரோஹித் சர்மாவின் முடிவில் எங்களது அழுத்தம் ஏதும் இல்லை : ராஜீவ் சுக்லா

இவ்வேளையில் தற்போது திடீரென டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும் தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்பதை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 ஐசிசி கோப்பைகளை பெற்று தந்த ரோகித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை பெற்று தந்த பின்னரே ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த திடீர் ஓய்வு முடிவு அனைவரது மத்தியிலும் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட இருந்ததாலேயே இந்த முடிவை அறிவித்திருக்கலாம் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது. அதோடு தற்போது 38 வயதாகும் அவருக்கு பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வை அறிவித்ததாகவும் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் மீது பிசிசிஐ எந்த ஒரு அழுத்ததையும் கொடுக்கவில்லை என்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எடுத்த முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு தான் என்றும் பி.சி.சி.ஐ-யின் துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வுபெறும் முடிவை எடுத்தது அவருடைய தனிப்பட்ட முடிவு தான்.

- Advertisement -

அதில் பிசிசிஐ நிர்வாகமோ அல்லது நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அழுத்தத்தையும் அவருக்கு கொடுக்கவில்லை. மேலும் நாங்கள் எந்தவொரு வீரருக்கும் நெருக்கடி கொடுப்பதில்லை இதுதான் பிசிசிஐ-யின் கொள்கை. வீரர்களின் செயல்பாடு மற்றும் திறனுக்கு ஏற்பவே நிர்வாகத்தின் மூலம் நகர்வுகள் நடைபெறும் மற்றபடி தனிப்பட்ட விடயத்தில் யார் மீதும் நாங்கள் அழுத்தத்தை கொடுப்பது கிடையாது.

இதையும் படிங்க : தமிழன்னா சும்மாவா.. அமித் மிஸ்ரா மற்றும் ரஷீத் கானின் வரலாற்று சாதனையை சமன் செய்த – வருண் சக்ரவர்த்தி

ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்திய அணிக்காக செய்த பங்களிப்பு அபரிவிதமானது. அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறோம். அதே போன்று இனிவரும் காலங்களில் அவரது அனுபவத்தையும், திறமையையும் ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் பயன்படுத்தி கொள்வோம் என ராஜீவ் சுக்லா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement