படிக்கலை தொடர்ந்து பெங்களூரு அணிக்கு கிடைத்த மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் – விவரம் இதோ

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றுள்ளது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்தப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் பெங்களூர் அணி தவித்து வந்த போது ஏபி டிவில்லியர்ஸ் உடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்துத் தந்த ராஜத் படிதார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கியது பெங்களூர் அணி.

patidar

- Advertisement -

அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 4வது ஓவரின் கடைசி பந்திலும், இளம் வீரரான தேவ்தத் படிக்கல் அடுத்த ஓவரின் முதல் பந்திலும் அவுட்டாகி அந்த அணியின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தனர். அப்போது களததில் நின்று கொண்டிருந்த இளம் வீரரான ராஜத் படிதாருடன் இணைந்து சிறிது நேரம் அதிரடி காட்டினார் பெங்களூர் அணி வீரரான மேக்ஸ்வெல். ஆனால் அவரும் 9வது ஓவரில் அமித் மிஸ்ராவின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். பிறகு வந்த அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஏபி டி வில்லியர்ஸுடன் இணைந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து தந்தார் ராஜத் படிதார்.

ஏற்கனவே மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பெங்களூர் அணிக்கு அப்போது ஒரே நம்பிக்கையாக இருந்தது ஏபி டி வில்லியர்ஸ் மட்டுமே. ஆனால் அவர் களத்தில் செட்டில் ஆகும்வரை அவருடன் இணைந்து ஒரு பார்ட்னர் ஷிப் அமைத்து தருவது அவசியமான ஒன்றாக இருந்தது. அதனை நேற்றைய போட்டியில் கனக்கச்சிதமாக செய்து முடித்தார் படிதார். 9வது ஓவரில் களத்திற்கு வந்த டி வில்லியர்ஸுடன் இணைந்து ஆடிய படிதார் 15வது ஓவரில்தான் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த படிதார் 22 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார். அதில் இரண்டு சிக்ஸர்கள் அடக்கம்.

patidar 1

பெங்களூர் அணி எப்போதுமே மிடில் ஆர்டரில் டிவில்லியர்ஸுடன் இணைந்து ஆட சரியான துணை இல்லாமல் தவித்து வந்தது. ஆனால் இந்த போட்டியில் டாப் ஆர்டரில் களமிறங்கிய ராஜத் படிதார், தனது விக்கெட்டை விடாமல் மிடில் ஓவர்களில் டி வில்லியர்ஸுடன் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இத்தொடரில் கடந்த போட்டிகளில் சொதப்பி வந்த படிதாருக்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தது விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது.

ஆனால் அப்போது பேட்டியளித்த விராட் கோலி, அவருடைய திறமையை என்னவென்று எங்களுக்கு தெரியும். அதனால்தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கிறோம் என்று கூறியிருந்தார். ராஜத் படிதாருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அவரும் தன் திறமையால் தேவ்தத் படிக்கல் போன்று ஒரு தவிர்க்க முடியாத வீரராக உருவெடுப்பாரா என்பதை இனிவரும் போட்டிகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

Advertisement