சேப்பாக்கத்தில் இப்படி ஒரு விஷயம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.. சி.எஸ்.கே வை சாய்த்த பிறகு – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

Rajat Patidar
- Advertisement -

நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் எட்டாவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்த வெற்றி உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல் : ரஜத் பட்டிதார்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ரஜத் படித்தார் 51 ரன்களையும், பில் சால்ட் 32 ரன்களையும் குவித்தனர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி :

- Advertisement -

பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் :

இந்த போட்டியின் போது பந்து சற்று நின்று வந்தது. எனவே இந்த இலக்கை எட்டுவது கடினம் என்று நினைத்தேன். அதோடு இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்று நினைத்தேன். எப்போதுமே சேப்பாக்கத்தில் விளையாடுவது மிகவும் ஒரு ஸ்பெஷலான அனுபவம். அதிலும் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மேலும் ஸ்பெஷலான ஒன்று. இந்த மைதானத்தில் உள்ள ரசிகர்கள் சென்னை அணிக்காக மிகப்பெரிய ஆதரவை அளிக்கிறார்கள்.

- Advertisement -

அதேபோன்று மற்ற மைதானங்களிலும் சொந்த அணிகளுக்கு ரசிகர்கள் ஆதரவளிப்பது வழக்கம் தான். இதுபோன்ற ஒரு பலமான அணிக்கு எதிராக நாங்கள் அவர்களது சொந்த மைதானத்தில் பெற்ற வெற்றி மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இந்த போட்டியில் 200 ரன்களை அடித்தால் எளிதாக சேசிங் செய்ய முடியாது என்று நினைத்தோம். அதனால் தான் நான் முடிந்த அளவுக்கு ரன் குவிப்பை அதிகரிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பந்தினையும் அடித்து விளையாடினேன்.

இதையும் படிங்க : அது எப்படி மாறுச்சுன்னு தெரியல.. வலுவா கம்பேக் கொடுப்போம்.. தோல்விக்கான 2 காரணம் பற்றி ருதுராஜ் பேட்டி

அதேபோன்று பந்துவீச்சிலும் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக ஹேசல்வுட் முதல் ஓவரில் அற்புதமாக பந்துவீசினார். பவர்பிளே ஓவர்களில் 2-3 விக்கெட்டுகளை எடுத்ததால் போட்டி எங்களது வசம் திரும்பியது. உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்ததாக ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement