இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 1 போட்டியானது மே 26-ஆம் தேதியான இன்று தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் காரணமாக இரவ்விரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
பில் சால்ட் இடம் குறித்து பேசிய ரஜத் பட்டிதார் :
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதனால் இவ்விரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இவ்வேளையில் பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரரான பிலிப் சாலட் இந்த போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் ஆர்.சி.பி அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான பில் சால்ட் காயம் காரணமாக பெரும்பாலான லீக் சுற்று போட்டிகளை தவற விட்டார். அவருக்கு பதிலாக மற்றொரு இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஜேக்கப் பெத்தல் துவக்க வீரராக விராட் கோலியுடன் களமிறங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இவ்வேளையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெத்தல் காயமடைந்து நாடு திரும்பியதால் அவருக்கு பதிலாக மீண்டும் ஆர்.சி.பி அணியுடன் இணைந்துள்ள பிலிப் சால்ட் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவரது உடற்தகுதி குறித்த முழு தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் குவாலிபயர் 1 சுற்று போட்டிக்கு முன்னதாக இந்த போட்டியில் பிலிப் சால்ட் விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது :
இதையும் படிங்க : கொல்கத்தா அணியிலிருந்து அவரை நீக்க வேண்டும்.. அதுதான் சரியா இருக்கும் – சேவாக் கருத்து
அவர் முழு உடலற்தகுதியுடன் பயிற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் இன்னும் பிளேயிங் லெவனை நாங்கள் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்தார். இதன் காரணமாக காயம் அடைந்திருக்கும் பிலிப் சால்ட்டை விளையாட வைத்து அவசரப்படுவதை விட கடைசியாக சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய வெங்கடேஷ் ஐயரை துவக்க வீரராக நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.



