போட்டியின் ஆரம்பத்திலே இப்படி நடந்தா ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்.. முதல் தோல்விக்கு பின்னர் – ரஜத் பட்டிதார் வருத்தம்

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-ஆவது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்த போட்டியில் நாங்க தோக்க இதுதான் காரணம் : ரஜத் பட்டிதார்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது துவக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்களையும், ஜிதேஷ் ஷர்மா 33 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 73 ரன்களையும், சாய் சுதர்சன் 49 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் : இந்த மைதானம் 200 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம் கிடையாது. 190 ரன்கள் வரை அடித்தாலே போதும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் பவர்பிளேவிற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தோம்.

- Advertisement -

பேட்டிங்கில் இன்டென்ட் சிறப்பாக இருந்தாலும் பவர்பிளேவிற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீண்டு வருவது மிக கடினமாக மாறியது. அந்த வகையிலேயே நிறைய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் எங்களால் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியவில்லை. அதேபோன்று இந்த இலக்கை வைத்து எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

இதையும் படிங்க : 7 வருஷம்.. ஜெர்ஸியை மாத்தும் போது கஷ்டமா இருந்துச்சு.. ஆர்சிபி’யை சாய்க்க அவங்க தான் ஹெல்ப் பண்ணாங்க.. சிராஜ் பேட்டி

அதிலும் குறிப்பாக போட்டியை 18-வது ஓவர் வரை கொண்டு வந்தது பாராட்டக்கூடிய ஒன்று. இந்த போட்டியில் எங்களது அணியின் வீரர்களான ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் ஆகியோர் விளையாடிய விதம் உண்மையிலேயே பாசிட்டிவான ஒரு விடயமாக மாறியுள்ளது. எங்களது அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளதை இவர்கள் மூவரும் நிரூபித்துள்ளனர் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement