ஆர்சிபி ஏற்கனவே ஐபிஎல் கோப்பை ஜெய்ச்சுடுச்சு.. அது தெரியாம கிண்டல் பண்ணாதீங்க.. படிதார் பதிலடி

Rajat Paditar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்ட அத்தொடர் மீண்டும் துவங்க உள்ளது. தற்போது நிலைமை சீராகியுள்ளதால் மீண்டும் துவங்கும் எஞ்சிய போட்டிகளில் முதலாவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது சொந்த மண்ணில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 8 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் அந்த அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் விளையாடிய ஆர்சிபி கடந்த 17 வருடங்களில் ஃபைனல் வரை சென்றும் கோப்பையை ஒரு முறை கூட வெல்லவில்லை.

- Advertisement -

கோப்பை ஜெய்ச்சுட்டோம்:

இருப்பினும் ஆர்சிபி ரசிகர்கள் தங்களுடைய அணிக்கு உச்சகட்ட ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். அதோடு நிற்காத அவர்கள் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட எதிரணி ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களிலும் மைதானத்திலும் மல்லுக் கட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால் ஆர்சிபி அணி எப்போதுமே கோப்பையை வெல்லாது என்று எதிரணி ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கமாகும்.

இந்த சூழ்நிலையில் 18 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை முயற்சித்து வரும் ஆர்சிபி அணிக்கு இதுவரை எந்தக் கேப்டனும் கோப்பையை வென்றுக் கொடுத்ததில்லை. நீங்களாவது அதை முதல் கேப்டனாக செய்வீர்களா? என்று ரஜத் படிதாரிடம் சமீபத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மயந்தி லாங்கர் கேட்டார். அதற்கு ரஜத் படிதார் கொடுத்த பதில் பின்வருமாறு.

- Advertisement -

கிண்டல் பண்ணாதீங்க:

“நாங்கள் ஏற்கனவே ஒரு கோப்பையை வென்றுள்ளோம். எங்களுடைய மகளிர் அணி அந்தக் கோப்பையை வென்றுள்ளது. எனவே நாங்கள் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது” எனக் கூறினார். அதாவது 2024 ஐபிஎல் கோப்பையை ஸ்மிருத்தி மந்தனா தலைமையில் மகளிர் ஆர்சிபி அணி வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடையாது – காரணம் என்ன?

அந்த வகையில் ஏற்கனவே தங்களுடைய அணி ஒரு ஐபிஎல் கோப்பையை வென்று விட்டதாக ரஜத் படிதார் கூறியுள்ளார். எனவே ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்று இனிமேல் யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வருடம் ஆடவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் உள்ளது.

Advertisement