இனியும் அவர் நமக்கு தேவை தானா? உடனே அவரை வீட்டுக்கு அனுப்புங்க.. – ரசிகர்கள் கொந்தளிப்பு

Rajat-Patidar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெறாமல் இருந்த போதிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியும் ராஞ்சி நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியிலும் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பிடித்த ரஜத் பட்டிதாருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 32 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்களையும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இப்படி அறிமுக போட்டியிலேயே அவர் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டாலும் அவருடைய பேட்டிங் ஸ்டைல் மற்றும் டெக்னிக் நன்றாக இருப்பதாக பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் முதல் இன்னிங்சில் 5 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் டக் அவுட் என ஏமாற்றத்தை அளித்த ரஜத் பட்டிதாருக்கு நான்காவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்கிற சந்தேகமும் இருந்தது.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியின் நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்து ராஞ்சி நகரில் தற்போது நடைபெற்று வரும் இந்த நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பினை வழங்கியது. ஆனால் இந்த போட்டியிலும் முதல் இன்னிங்சில் 17 ரன்களை எடுத்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது இந்திய அணி 192 ரன்கள் என்கிற இலக்கினை நோக்கி விளையாட ஆரம்பித்தபோது களத்திற்கு வந்து இந்த இரண்டாவது இன்னிங்சிலும் டக் அவுட்டாகி வெளியேறினார்.

இதையும் படிங்க : 84 ரன்ஸ்.. அற்புதமான துவக்கத்தை வீணடித்த இளம் வீரர்.. திடீரென சரிந்த இந்தியா வெல்லுமா?

இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள ரசிகர்கள் இனியும் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டுமா? தனக்கு கொடுக்கப்பட்ட மூன்று போட்டியிலுமே அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோன்று இரண்டு முறை அவர் டக் அவுட் ஆகியிருக்கிறார். இதன் காரணமாக அவரை நீக்கிவிட்டு அவரிடத்தில் ரஞ்சி போட்டியில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று காட்டமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement