- Advertisement -
ஐ.பி.எல்

அது பஞ்சாப்புக்கு சாதகமாகிடுச்சு.. பிட்ச் நல்லா இருந்தும் தோற்க இதான் பெரிய காரணம்.. ஆர்சிபி கேப்டன் படிதார்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 34வது போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்தது. பெங்களூருவில் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி இருதரப்புக்கும் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் போராடி 95-9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரஜத் படிதார் 23, டிம் டேவிட் 50* ரன்கள் அடித்தனர். பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப், மார்கோ யான்சென், ப்ரார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 98-5 ரன்களை அடித்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பெற்றது.

- Advertisement -

பெங்களூரு தோல்வி:

அதிகபட்சமாக நேஹல் வதேரா 33* ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூரு அணிக்கு ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தும் 3வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியின் பிட்ச் மோசமாக இல்லை என்று பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் கூறியுள்ளார். இருப்பினும் மழை காரணமாக பிட்ச் தார்ப்பாய் கொண்டு நீண்ட நேரம் மூடப்பட்டிருந்தது பஞ்சாப் பவுலர்களுக்கு உதவி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிராக பேட்டிங்கில் சீரான இடைவேளைகளில் விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிட்ச் ஆரம்பத்தில் இருதலை பட்சமாக இருந்தது. அதில் நாங்கள் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் முக்கியம். ஆனால் நாங்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு பெரிய காரணமாக அமைந்தது”

- Advertisement -

தோல்விக்கு காரணம்:

“மழை சூழ்நிலை காரணமாக தேவ்தூத் படிக்கலை அணியிலிருந்து நீக்குவது போன்ற சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. பிட்ச் அந்தளவுக்கு மோசமாக இல்லை. அது நீண்ட நேரம் தார்ப்பாய் கீழே இருந்தது எதிரணி பவுலர்களுக்கு உதவி செய்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள். பிட்ச் எப்படி இருந்தாலும் நாங்கள் வெற்றியைப் பெறுவதற்கு நன்றாக பேட்டிங் செய்து பெரிய ரன்கள் அடித்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அதை செய்றத விரும்பல.. பஞ்சாப் வெற்றிக்கு அந்த 3 பேர் காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ்

“எங்களுடைய பவுலிங் துறை நன்றாக செயல்பட்டது பெரிய நேர்மறையான விஷயம். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டனர். அது கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தது. பேட்டிங் துறையில் எங்களுடைய சில தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -