ஆடுறது டி20 கிரிக்கெட். ஆனா டிராவிட், புஜாராவை பிடிக்கும்ன்னு சொல்லும் ஆர்.சி.பி வீரர் – இவரெல்லாம் எப்படி அதிரடியா ஆடுவாரு ?

RCB
- Advertisement -

இதுவரை ஐபிஎல் தொடரை கைப்பற்றாத ராசியில்லாத அணியாக பார்க்கப்படும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒவ்வொரு வருடமும் கோப்பையை கைப்பற்றும் நம்பிக்கையுடன் களம் இறங்கி விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் மேக்ஸ்வெல், ஜேமிசன், கிறிஸ்டியன் என முன்னணி வீரர்கள் பலரை ஏலம் எடுத்து மட்டுமின்றி இந்திய இளம் வீரர் களையும் அதிகமாகக் கொண்டு பலமான அணியாக மாறிய பெங்களூர் அணி துவக்கத்திலேயே நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது.

RCB

- Advertisement -

அதுமட்டுமின்றி 7 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து சிறப்பாக விளையாடி வந்தது. இந்நிலையில் இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் ஆர்சிபி இந்த கனவு தற்போது தாமதமாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பெங்களூர் அணிக்காக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்ட ராஜட் படிதார் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 76 ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு போட்டியில் மட்டும் 31 ரன்கள் விளாசியுள்ளார்.

இவர் ரன்கள் குறைவாக அடித்து இருந்தாலும் நல்ல திறமையான வீரர் என்று கூறி கோலி இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வரிகையில் தற்போது பெங்களூர் அணியின் மூன்றாவது வீரராக களம் இறங்கி விளையாடி வரும் அவர் தற்போது பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல்லில் எனக்கு பிடித்த அணி ஆர்சிபி தான்.

patidar

ஏனெனில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருப்பதால் அவர்களுடன் இணைந்து விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலியாக தற்போது என்னை கருதுகிறேன். மேலும் ஆர்.சி.பி அணியுடன் நான் இணைந்த போது இவர்களை சந்திக்க போவதை நினைத்து பயந்தேன். ஏனெனில் அவர்கள் இருவரும் ஜாம்பவான் வீரர்கள் அதனால் அவர்களுடன் விளையாட பயந்தேன்.

patidar 1

தற்போது அனைத்து நெருக்கடிகளையும் சமாளித்து ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வருவேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் நான் ராகுல் டிராவிட் போல வர விரும்புகிறேன் என்று கூறினார். அதுமட்டுமின்றி தற்காலத்தில் தனக்கு பிடித்த வீரர் என்றால் புஜாராவை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இப்படி டிராவிட், புஜாராவை பிடிக்கும் என்று கூறும் இவரால் எப்படி அதிரடியாக ஆட முடியும் என்றும் ரசிகர்கள் சில கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement