சாரிப்பா மன்னிச்சுடு.. போராட்டம் நடத்திய படிதார்.. நேரலையில் மன்னிப்பு கேட்டு தீர்ப்பை மாற்றிய அம்பயர்

Rajat Patidar
- Advertisement -

சயீத் முஷ்டாக் அலி 2024 டி20 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் மாபெரும் பெங்களூருவில் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மத்திய பிரதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் 20 ஓவரில் 174-8 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரஜத் படிதார் அதிகபட்சமாக 81* (40) ரன்கள் குவித்து சயீத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றின் ஃ.பைனலில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டனாக சாதனை படைத்தார். மும்பைக்கு அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் மற்றும் ரோய்ஸ்டன் தியாஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதை அடுத்து 175 ரன்களை துரத்திய மும்பைக்கு ரஹானே 37, சூரியகுமார் யாதவ் 48, சுயன்ஸ் செட்ஜ் 36* ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

படிதார் போராட்டம்:

அதனால் 17.5 ஓவரில் 180-5 ரன்கள் குவித்து மும்பை வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்துக்கு அதிகபட்சமாக ட்ரிபேஷ் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசத்துக்கு அதிரடியாக விளையாடிய ரஜத் படிதாருக்கு எதிராக சர்துள் தாகூர் 20வது ஓவரின் கடைசி பந்தை ஒயிட் போல வீசினார்.

அதை துரத்தி சென்று அடிக்க முயற்சித்த படிதார் தவற விட்டார். அந்தப் பந்தை ஒயிட் என்று களத்தில் இருந்த நடுவர் அறிவித்தார். இருப்பினும் மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதற்கு எதிராக ரிவ்யூ எடுத்தார். அதை சோதித்த மூன்றாவது நடுவர் அனந்த பத்மநாபன் அது ஒயிட் கிடையாது என்று அறிவித்தார். குறிப்பாக பேட்ஸ்மேன் வலது பக்கம் நகர்ந்து வந்ததால் ஒயிட் கிடையாது என்று அவர் அறிவித்தார்.

- Advertisement -

சரிப்பா மன்னிச்சுடு:

ஆனால் அந்த பந்து முற்றிலும் பிட்ச்க்கு வெளியே சென்றது. அதனால் ஏமாற்றமடைந்த ரஜத் படிதார் அதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று களத்தில் இருந்த நடுவரிடம் போராட்டம் செய்தார். அதனால் களத்தில் இருந்த நடுவர் மீண்டும் சோதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை மீண்டும் சோதித்த மூன்றாவது நடுவர் “மன்னிக்கவும். இந்த பந்து பிட்ச்சுக்கு வெளியே பட்டுள்ளது. அதை முதலில் நான் பார்க்கவில்லை” என்று சொல்லி ஒய்ட் வழங்கினார்.

இதையும் படிங்க: 81 ரன்ஸ்.. படிதார் அபார சாதனை வீண்.. சூரியகுமார் அசத்தல்.. ம.பி’யை விளாசிய மும்பை.. 62வது சாதனை பட்டம்

அதனால் மீண்டும் வீசப்பட்ட பந்தில் படிதார் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார். இது போக வெங்கடேஷ் ஐயர் கொடுத்த கேட்ச்சை ரஹானே கிட்டத்தட்ட தரையோடு தரையாக பிடித்தார். அதை அவுட் என்று 3வது நடுவர் அறிவித்தார். அந்த வகையில் இந்தப் போட்டியில் நடுவர்கள் மிகவும் சுமாரான தீர்ப்புகளை வழங்கியது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

Advertisement