ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித்தை நீக்கம். இந்திய இளம் வீரர் கேப்டன் – புதிய கேப்டன் யார் தெரியுமா ?

Smith
- Advertisement -

பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் பல்வேறு சிக்கலுக்கு இடையில் வேறு வழியில்லாமல் இந்தியாவிற்கு பதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டது. செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே வைத்து கிட்டத்தட்ட 60 போட்டிகள் நடத்தி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் 5 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Smith

- Advertisement -

இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் 11வது ஐபிஎல் தொடரை மே மாதம் இந்தியாவிலேயே நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும், 10 அணிகளாக திட்டமிடப்பட்டிருந்த இந்த தொடரில் 8 அணிகள் மட்டுமே விளையாடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தற்போதிலிருந்தே அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடரில் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

மேலும், பிப்ரவரி மாதம் இந்த தொடருக்கான மிகப்பெரிய ஏலம் நடைபெறப் போவதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் யாரை வைத்துக்கொள்வது யாரை நீக்கிவிடுவது என்று பட்டியலை தயாரித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்ட இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் அவரது தலைமையில் அந்த அணி பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை. ராஜஸ்தான் அணியை 2008 ஆம் ஆண்டில் முதன்முதலாக ஒரே ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி ஸ்டீவன் ஸ்மித்தை 12.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது இருந்தாலும் அவரால் அந்த அணியை இருமுறை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து செல்ல முடிந்ததே தவிர கோப்பையை கைப்பற்றித்தர முடியவில்லை.

Smith

அவரிடம் எதிர்பார்த்த விஷயங்கள் வரவில்லை என்பதன் காரணமாக அவரை வெளியேற்றிவிட்டு அவருக்குப் பதிலாக இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Advertisement