இவங்க இல்லனா என்ன ? மீதி இருக்கும் பிளேயர்கள் எதுக்கு இருக்காங்க ? அவங்கள வச்சி நடத்துங்க – ஐ.பி.எல் துவங்க மாஸ் ஐடியா

Rajasthan
- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த உயிர்கொல்லி மிகத் தீவிரமாக தற்போது பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

அதனால் ஏப்ரல் 15 ஆம் தேதியில் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடக்குமா என்பது கேள்விக்குறிதான். எப்போது வைரஸின் தாக்கம் குறைகிறதோ அப்போது தான் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இந்த வைரஸ் காரணமாக பல வெளிநாட்டு தொடர்களும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ எப்படியாவது ஐபிஎல் போட்டிகளை நடத்தி விடலாம் என முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது :

rajasthan

இப்போது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக இந்தியர்கள் மட்டுமே வைத்து ஐபிஎல் தொடரை நடத்தினால் நன்றாக இருக்கும். இதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அப்படி நடந்தால் இதுதான் இந்தியன் பிரீமியர் லீக் தொடராக இருக்கும். இதற்கு முன்னர் இப்படி ஒரு தொடரை நாம் எதிர் பார்த்திருக்க மாட்டோம்.

- Advertisement -

தற்போது தான் அந்த தொடரை நடத்த நமக்கு இந்த சூழல் வாய்ப்புகளை அளித்து உள்ளது. தொடரையே நடத்தாமல் போவதற்கு இந்திய வீரர்களை மட்டுமே வைத்து நடத்தினால் கூட நன்றாக இருக்கும். இது தொடர்பான முடிவை ஐபிஎல் கமிட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

rajasthan

எப்படி யார் என்ன யோசனை கூறினாலும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தால் மட்டுமே ஐ.பி.எல் தொடர் நடைபெறுவது குறித்து யோசிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement