இமாலய இலக்கினை நிர்ணயித்த ராஜஸ்தான் அணி. திக்குமுக்காடிய சி.எஸ்.கே பவுலர்கள் – விவரம் இதோ

Samson-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தற்போது விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்தது.

csk vs rr

- Advertisement -

மேலும் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை சிஎஸ்கே அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் செட் செய்துள்ளது. துவக்க வீரரான ஜெய்ஸ்வால் அறிமுகப் போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அணியின் கேப்டனான ஸ்மித் தனது பொறுப்பை உணர்ந்து 47 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 69 ரன்களை குவித்தார்.

இளம் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் 32 பந்துகளை மட்டுமே சந்தித்து 9 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என சென்னை வீரர்களை சிதறடித்து 74 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரின் அதிரடியால் ஸ்கோர் மளமளவென உயர கடைசி ஓவரை எதிர்கொண்ட ஆர்ச்சர் 4 சிக்சர்கள் அடித்து விலாச இறுதியில் ராஜஸ்தான் அணி 216 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன்களை குவித்தது.

Samson

அதன் பின்னர் தற்போது இந்த இலக்கை எதிர்த்து சென்னை அணியில் விளையாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சென்னை அணியின் வீரர்களான சாவ்லா 4 ஓவர் வீசி 55 ரன்களையும் மற்றும் லுங்கி நெகிடி 4 ஓவர் வீசி 56 ரன்களையும் விடுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Smith

சென்னை அணி சார்பாக இளம் வீரர் சாம் குரான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத்தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும் ஏகப்பட்ட ரன்களை வாரி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement