இதுதான் உங்க புதிய ஜெர்ஸியா? யாக் நல்லாவே இல்ல – ராஜஸ்தான் அணி வெளியிட்ட ஜெர்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்

RR
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இம்முறை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தயாராகும் 10 அணிகள்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இந்த தொடர் துவங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் விளையாடும் வீரர்களும் பயிற்சியாளர்களும் மும்பை நகரில் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதை அடுத்து இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் நாளை முதல் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

- Advertisement -

இத்துடன் இந்த தொடரில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக ஒரு சில அணி நிர்வாகங்கள் தங்கள் அணி வீரார்கள் அணிந்து விளையாடும் ஜெர்சியில் மாற்றங்களை செய்து புதிய ஜெர்சியை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் தங்களது புதிய ஜெர்சியை வெளியிட்டன.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெர்ஸி:
அந்த வரிசையில் ஐபிஎல் 2022 தொடரில் தங்கள் அணி வீரர்கள் அணிந்து விளையாடும் புதிய ஜெர்சியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டது. பொதுவாகவே ராஜஸ்தான் நகரை பிங்க் சிட்டி என அனைவரும் அழைப்பதால் சமீப காலங்களாக அந்த அணியின் ஜெர்சியில் பெரும்பாலும் பிங்க் நிறம் பயன்படுத்தப்பட்டு அதில் லேசான ஊதா நிறமும் சேர்க்கப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்த புதிய ஜெர்சி அறிவிப்பில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், யூஸ்வென்ற சஹால், ரியன் பராக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள புதிய டிசைனில் அந்த பிங்க் நிறத்தை சற்று அதிகமாக குழைத்து அடிக்க பட்டுள்ளது என்றே கூறவேண்டும். ஆம் இம்முறை வெளியிடப்பட்டுள்ள புதிய ஜெர்ஸியில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிங்க் நிறம் அடர்த்தியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் லேசான வெள்ளை நிற கோடுகள் படர்ந்து இருக்கும் நிலையில் தோள்பட்டை, கைபட்டை போன்ற பகுதிகளில் கரு ஊதா நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கலாய்க்கும் ரசிகர்கள்:
இந்த ஜெர்ஸியை பார்க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் வழக்கம் போல மிகச் சிறப்பாக உள்ளது என பாராட்டி வருகிறார்கள். ஆனால் இதைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் விதவிதமாக கலாய்க்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த புதிய ஜெர்ஸியை அணிந்திருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை பார்க்கும் போது ஐஸ்கிரீம் விற்கும் குரூப் மாதிரி உள்ளது என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்க்க துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : பிஎஸ்எல் தான் இனி டாப்! ஐபிஎல் தொடரை மண்ணை கவ்வ புதிய பிளான் ரெடி – காய் நகர்த்தும் ரமீஸ் ராஜா

அத்துடன் “பேஸ்கின் ராபின்ஸ்” எனப்படும் பிரபல ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை போல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் தோன்றுகிறார்கள் என சில ரசிகர்கள் பேசுகிறார்கள். அதேபோல் பிரபல சுவிங்கம் கம்பெனியான பூமர், பாத்ரூமை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஹேப்பிக் போன்ற நிறத்தில் உள்ளதாகவும் சில ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். இதற்கு கடந்த வருடம் பயன்படுத்தப்பட்ட ஜெர்ஸியே எவ்வளவோ பரவாயில்லை என பல ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement