பிஎஸ்எல் தான் இனி டாப்! ஐபிஎல் தொடரை மண்ணை கவ்வ புதிய பிளான் ரெடி – காய் நகர்த்தும் ரமீஸ் ராஜா

Ramiz Raja Sourav Ganguly
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி அன்று துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. உலக அளவில் நடைபெறும் இதர டி20 தொடர்களைக் காட்டிலும் இந்தியாவில் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர் உலகம் முழுவதிலும் மிகவும் புகழ்பெற்று பிரசித்தி பெற்ற டி20 தொடராக உருவெடுத்துள்ளது.

ipl

- Advertisement -

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பணத்திலும் சரி தரத்திலும் சரி உலகின் இதர கிரிக்கெட் தொடர்களை காட்டிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து அடையாளத்தை பெற்றுள்ளது.முதலில் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஐபிஎல் தொடரில் நடைபெறும் முக்கால்வாசி போட்டிகளில் வெற்றி என்பது கடைசி பந்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. சில சமயங்களில் அதையும் தாண்டி சூப்பர் ஓவர் வரை செல்வதால் இந்த தொடரில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்து வருகிறது.

இதனால் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை விட ஐபிஎல் தான் மிகச்சிறந்த தொடர் என சுனில் கவாஸ்கர், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்கள் கடந்த காலங்களில் பாராட்டியுள்ளார்கள். அதேபோல் வருமானத்தைப் பொறுத்தவரை இந்த தொடரை நடத்துவதன் வாயிலாக ஒவ்வொரு வருடமும் சுமார் 4000 கோடிகளை பிசிசிஐ வருமானமாக பெறுகிறது. இது சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசி ஈட்டும் வருமானத்தை விட அதிகமானதாகும்.

IPL-bcci

மண்ணை கவ்வ பிளான் தயார்:
இப்படி ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் தொடராக உருவெடுத்து நிற்கும் ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பிக் பேஷ், பிஎஸ்எல் போன்ற தொடர்களை நடத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் ஐபிஎல் தொடரைப் பார்த்து பாகிஸ்தான் பிரீமியர் லீக் எனப்படும் பிஎஸ்எல் தொடரை கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. என்னதான் இந்தியாவிற்கு போட்டியாக இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தினாலும் பணத்திலும் தரத்திலும் ஐபிஎல் தொடரை அவர்களால் எட்ட முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் வரும் காலங்களில் ஐபிஎல் தொடரை மண்ணை கவ்வ செய்ய புதிய திட்டம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயல்படும் நிலையை உருவாக்க வேண்டியுள்ளது. எங்களிடம் தற்போது பிஎஸ்எல் மற்றும் ஐசிசி அளிக்கும் நிதியை தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பினும் அடுத்த வருடத்திலிருந்து பிஎஸ்எல் தொடருக்காக ஏல முறையை நடத்துவது பற்றி நான் விவாதித்து வருகிறேன். இதுபற்றி அணி உரிமையாளர்களுடன் விவாதிக்க வேண்டியுள்ளது”

psl 1

“இது பணத்தை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டு. எங்கள் நாட்டில் கிரிக்கெட் சம்பந்தமான நிதி வளர்ச்சி அடைந்தால் எங்களின் மதிப்பும் வளர்ச்சி அடையும். எங்கள் நாட்டின் கிரிக்கெட்டை பொறுத்த வரை அதிக பணத்தை பெற்றுத்தருவது பிஎஸ்எல் தொடராகும். எனவே பிஎஸ்எல் தொடருக்கான நிதியை அதிகரித்து ஏல முறையை கொண்டு வந்தால் அதன்பின் ஐபிஎல் தொடரை என்னால் வளைக்க முடியும். அதன்பின் பிஎஸ்எல் தொடரை தவிர்த்துவிட்டு யாரெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட போகிறார்கள் என்பதை நானும் பார்க்கிறேன்” என கூறினார்.

- Advertisement -

இனி பிஎஸ்எல் தான் டாப்:
அதாவது ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்காக ஏலத்தின் வாயிலாக பல கோடி ரூபாய்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதனால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் பிஎஸ்எல், பிக் பேஷ் போன்ற உலகின் இதர டி20 தொடர்களில் விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முன்னுரிமையும் ஆர்வமும் காட்டுகிறார்கள்.

psl

அப்படிப்பட்ட நிலையில் வரும் காலங்களில் பிஎஸ்எல் தொடரிலும் வீரர்களை தேர்வு செய்ய ஏலமுறையை கையாள உள்ளதாக ரமீஷ் ராஜா தெரிவித்துள்ளார். இதுநாள் வரை பிஎஸ்எல் தொடரில் விளையாடும் வீரர்கள் ட்ராஃப்ட் அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார்கள். அதன் காரணமாக பல வீரர்கள் அந்தத் தொடரை விட ஐபிஎல் தொடரில் விளையாட அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் அடுத்த வருடம் முதல் டிராப்ட் முறைக்கு பதிலாக ஏல முறையை கொண்டு வந்து ஐபிஎல் தொடரை மண்ணைக் கவ்வ செய்ய காய் நகர்த்த உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 – 23 : முன்னேறும் இந்தியா, முதலிடம் பிடித்து சாதனை படைத்த இந்திய வீரர்

ஆனால் அவர்களின் கனவு என்றுமே பலிக்காது என்பதே உண்மையாகும். ஏனெனில் பிஎஸ்எல் தொடரில் அதிக சம்பளமாக பாபர் அசாம் வெறும் 2.30 கோடிகளை மட்டுமே பெறுகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரரான கேஎல் ராகுல் 17 கோடிகளை சம்பளமாகப் பெறுகிறார். இந்த 17 கோடிகள் என்பது பிஎஸ்எல் தொடரில் விளையாடும் ஒரு அணியின் விலைக்கு கூட ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கருத்துக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராசாவை பல இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement