ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்கு பதிலாக 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை தேர்வு செய்த – ராஜஸ்தான் அணி

Stokes
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL

- Advertisement -

அதன்படி தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாடுகளை சேர்ந்த சில வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாவது குழந்தை பிறந்த இருப்பதன் காரணமாக பட்லரும், ஏற்கனவே கிரிக்கெட்டிலிருந்து சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் விலகிய ஸ்டோக்ஸ் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Buttler 1

இதன் காரணமாக அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு அற்புதமான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை தேர்வு செய்தது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்று உறுதியாகி உள்ள எவின் லூயிஸ் மற்றும் தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Lewis

ஓஷன் தாமஸ் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர் என்பதும், லீவிஸ் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு நல்ல தேர்வு தான்.

Advertisement