கொரோனா நிதியுதவியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரசாங்கத்திற்கு வழங்கிய தொகை எவ்வளவு தெரியுமா ? – இத்தனை கோடியா ?

ஐபிஎல் 14வது சீசன், இந்தியாவில் மிகுந்த கொரானா கட்டுப்பாடுகளுடன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 25 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஒருபுறம் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், மற்றொருபுறம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

ipl

இந்திய மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு போதுமான அளவு படுக்கை வசதிகள் இல்லாததாலும், கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான பற்றாக் குறையும் நிலவுவதால் இந்தியாவிற்கு உதவ பல்வேறு உலக நாடுகள் தாமாக முன்வந்துள்ளன. இன்னும் வரப்போகும் இரண்டு வாரங்கள் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சுகாதார நிபுணர்கள்.

இப்படி இந்தியாவில் கொரானா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடர் தேவையா ? என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் கொரானா தொற்றினால் மன அழுத்தத்தில் உள்ள மக்கள் ஐபிஎல் போட்டிகளை காண்பது அவர்களின் மன அழுத்தத்தை சற்று குறைக்கும் என்பதால் தான் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என அறிவித்திருந்தது ஐபிஎல் நிர்வாகம்.

IPL-1

இதற்கிடையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் பொருட்களை வாங்குவதற்கும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் நன்கொடை வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் ஆக்சிஜன் பொருட்கள் வாங்குவதற்காக 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கி, மற்றவர்களையும் தங்களால் முடிந்த அளவு நன்கொடையை வழங்கி இந்தியாவிற்கு துணை நிற்குமாறு கேட்டுக்கொண்டார். அவரின் இந்த செயல்பாட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரெட் லீ பாராட்டியதோடு மட்டுமல்லாமல், ரூபாய் 41 லட்சத்தையும் இந்தியாவிற்கு நன்கொடையாக வழங்கி இருந்தார்.

- Advertisement -

இதற்கிடையில் பேட் கம்மின்ஸ் மற்றும் பிரெட் லீ ஆகியோரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ரூபாய் 7.5 கோடியை ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக நன்கொடையாக அளித்திருக்கிறது. இதுகுறித்த தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,

morris 1

கொரானாவின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக ராஜஸ்தான் அணி உரிமையாளர்கள், அந்த அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஆகியோரிடமிருந்து நன்கொடையாக பெற்ற ஒரு மில்லியன் டாலர்களை (சுமார் 7.5 கோடி) இந்திய அரசிற்கு வழங்குகிறது என்று குறப்பிட்டிருக்கிறது. ஐபிஎல் தொடர்களில் விளையாடும் எட்டு அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டுமே இதுவரை கொரானாவிற்கு நிதி உதவி அளித்திருப்பதால், அந்த அணியை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.