சோர்ந்து போன ஸ்மித்துக்கு…இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான் ராயல் – என்ன தெரியுமா ?

smith
- Advertisement -

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டனான ஸ்மித்திற்கு ஐசிசி அபராதத்துடன் கூடிய தண்டனை விதித்தது. பின்னர் இந்த பிரச்சனையை சீரியஸாக எடுத்துக்கொண்டு விசாரித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் பந்தை சேதப்படுத்திய செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஓராண்டு தடைவித்தது.

Steve Smith

- Advertisement -

இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல்-இல் இரண்டாண்டு தடைக்கு பின்னர் ஸ்மித் தலைமையில் களமிறங்க காத்திருந்த வேளையில் ஸ்மித்திற்கு ஆஸ்திரேலிய அணி தடைவிதித்த பின்னர் ஐபிஎல் தலைவர் ராஜேஷ் சுக்லாவும் இந்தாண்டு ஐபிஎல்-இல் ஸ்மித் விளையாடமாட்டார் என்று தெரிவித்துவிட்டார்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அடுத்த ஐபிஎல்-இல் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுவார் என்று தெரிவித்துள்ளது.ஸ்மித்திற்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட ஓராண்டு தடையானது அடுத்த ஐபிஎல் சீசன்.

தொடங்குவதற்குள் முடிந்துவிடும் என்பதால் அடுத்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அடுத்த ஐபிஎல்-இல் ஸ்மித் ராஜஸ்தான் அணியை தலைமை ஏற்று நடத்துவது கேள்விக்குறி தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement