RR vs MI : தோனி தலைமையிலான சென்னை அணிக்கு அடுத்து ராஜஸ்தான் அணியே இந்த சாதனை செய்துள்ளது – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை

Smith-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 36 ஆவது போட்டி இன்று மதியம் 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Smith-1

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. டிகாக் 47 பந்துகளை 65 ரன்களை அடித்தார், சூரியகுமார் யாதவ் 34 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கினை நிர்ணயித்தது மும்பை அணி.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 59 ரன்களை அடித்தார், ரியான் 43 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Smith

2018 RR vs MI : ஜெய்ப்பூர் போட்டி – 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
2018 RR vs MI : மும்பை போட்டி – 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
2019 RR vs MI : மும்பை போட்டி – 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி
2019 RR vs MI : ஜெய்ப்பூர் போட்டி – 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் சென்ற வருடமும் மும்பை அணியை 2 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு அடுத்து ராஜஸ்தான் அணி மட்டுமே மும்பை அணியை தொடர்ந்து 4 போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்த அணியாக தற்போது முத்திரை பதித்துள்ளது.

Advertisement