CSK vs DC : ஜென்டில்மேன் கேம் ஆடிய சின்ன தல ரெய்னா மற்றும் பண்ட் – குவியும் பாராட்டுக்கள்

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமை

Raina
- Advertisement -

நேற்று நடந்த டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது டெல்லி அணியை சேர்ந்த ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருடைய ஷூ லேஸ் அவிழ்ந்தது. இதனை சரி செய்ய அவர் சுரேஷ் ரெய்னாவை அழைத்தார். உடனே அதனை ஏற்று பண்டின் ஷூ லேஸை ரெய்னா கட்டி விட்டார். தன்னை விட பல வயது சிறியவராக பண்ட் இருந்தாலும் போட்டியின் போது அவருக்கு உதவிய ரெய்னாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் குவாலிபயர் 2 போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன்களை குவித்தார் முன்ரோ 27 ரன்களை குவித்தார். சென்னை அணியின் சார்பாக பிராவோ சிறப்பாக பந்து வீசி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிறகு 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக டுபிளிசிஸ், வாட்சன் ஆகியோர் சதம் அடித்து அரைசதம் அடித்தனர். டுபிளிசிஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement