ஐ.சி.சி கோப்பை மட்டுமல்ல. ஐ.பி.எல் கோப்பையை கூடத்தான் ஜெயிக்கல அதுக்காக ? – கோலிக்கு சப்போர்ட் செய்த ரெய்னா

Raina
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கேப்டன் பதவி ஏற்றார். அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் கேப்டனாக மாறினார். இதுமட்டுமின்றி ஆர்.சி.பி அணிக்கும் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து வருகிறார். இப்படி கேப்டனாக பல ஆண்டுகள் இருந்து வருகிறார்.

kohli 1

- Advertisement -

அதுமட்டுமின்றி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மென், ஆல்டைம் மிகச்சிறந்த வீரர் என்று அனைத்து அடையாளங்களுடனும் பார்க்கப்படும் விராட் கோலி அவரது தலைமையில் ஒரே ஒரு ஐசிசி தொடரை கூட வென்றதில்லை. இதுதான் தற்போது விராட் கோலியின் மீது இருக்கும் ஒரே ஒரு குறை. நெட்டிசன்கள் தோனியை விமர்சித்து பேசவும் இது மட்டும்தான் ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோலியின் கேப்டன்சி குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில் : என்னை பொறுத்தவரை கோலி இப்போதும் நம்பர் ஒன் கேப்டன் தான். அவரது சாதனைகள் அவர் எவ்வளவு சிறப்பான கேப்டன் என்பதை கூறும். உலகின் நம்பர் 1 வீரரான அவர் ஐசிசி தொடர்களை மட்டுமல்ல ஐபிஎல் கோப்பையை கூட வெல்லவில்லை தான். ஆனால் அவருக்கு இன்னும் சற்று அவகாசம் கொடுக்க வேண்டும்.

Kohli-angry

இப்போதுதான் 2-3 உலக கோப்பைகளை தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறார். நிச்சயம் இனி வரும் உலகக் கோப்பைகளில் அவர் இந்திய அணியை வெற்றி பெற வைப்பார். மேலும் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறுவது என்பது சுலபம் கிடையாது. அந்த வகையில் இந்திய அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி அனைத்து தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றுள்ளார்.

raina 1

அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணியை கோலி அழைத்துச் சென்றார். இப்படியிருக்க கோலியின் கேப்டன்சி மீது குறை கூறுவது தவறு. இந்திய அணி ஒன்றும் எளிதான அணி கிடையாது. ஏற்கனவே நாம் மூன்று உலகக் கோப்பைகளை வென்று உள்ளோம். நிச்சயம் கோலி தலைமையிலும் இனி வெல்வோம் ரெய்னா கோலிக்கு ஆதரவாகப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement