சென்னை வரும்போதே எனக்கு தெரியும். நிறைய அழுதோம். கட்டி தழுவினோம் – ஓய்வு தருணம் குறித்து ரெய்னா பகிர்வு

Raina-2

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை வரை சரியாக சென்று கொண்டிருந்த கிரிக்கெட் உலகம் இரவு 7.29 க்கு மணிக்கு பிறகு பரபரப்பானது. ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை மிகச் சாதாரணமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தோனி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இன்னும் சில நிமிடங்களில் டோனியை தொடர்ந்து சின்ன தல ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

Raina

தோனிக்காவது 39 வயதாகிறது. ஆனால் சுரேஷ் ரெய்னாவுக்கு வெறும் 33 வயதுதான். மேலும் இந்திய அணிக்கான திரும்பும் வாய்ப்பு இருந்தும் அவர் தோனியின் வழியிலேயே பயணிப்பதாக தனது ஓய்வை அறிவித்தார். சென்னை அணியின் இருபெரும் தூண்களாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை சோகக் கடலில் மூழ்கடித்தனர்.

மேலும் இவர்கள் இருவரும் ஓய்வைஅறிவிக்கும் போது சென்னையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். மேலும் பயிற்சியை முடித்த பிறகு ஒருவர் பின் ஒருவராக இந்த அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது ஓய்வு அறிவித்த நேரம் குறித்த அந்த தருணத்தை சுரேஷ் ரெய்னா பகிர்ந்துள்ளார். அதன்படி ரெய்னா கூறுகையில் :சென்னை வந்ததும் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்பது எனக்கு தெரியும்.

Raina 3

எனவே நானும் ஓய்வை அறிவிக்க தயாராகத்தான் இருந்தேன். நான், சாவ்லா, தீபக் சாஹர், கரண் ஷர்மா ஆகியோர் விமானம் மூலம் 14ஆம் தேதி ராஞ்சிக்கு சென்றோம். அங்கு தோனி மற்றும் மோனு சிங்கை அழைத்துக்கொண்டு சென்னை வந்தோம். பிறகு 15 ஆம் தேதி பயிற்சி முடிந்ததும் எங்களது ஓய்வை அறிவித்த பிறகு நானும் தோனியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டோம். நிறைய அழுதோம்.

- Advertisement -

அதன்பின்னர் நாங்கள் 6 பேரும் ஒன்றாக அமர்ந்து எங்களது நட்பு குறித்தும், எதிர்காலம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியானது என்று ரெய்னா கூறியிருந்தா.ர் மேலும் அவர்கள் இருவரும் ஓய்வை அறிவித்த பிறகு கட்டித் தழுவிய வீடியோ, நடந்து சென்ற படி இருக்கும் வீடியோவையும் சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.