இந்திய அணியில் தோனி காலத்திலிருந்து ஆடி வருபவர் சுரேஷ் ரெய்னா. தற்போது அவருக்கு 33 வயதாகிறது. கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியுடன் பயணித்தவர். இவர் கடைசியாக கடந்த 2 வருடத்திற்கு முன்னர் ஒரு டி20 போட்டியில் இந்தியாவிற்கு ஆடினார். அதன் பின்னர் சரியான பார்ம் இல்லாததால் அணியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

உள்ளூர் போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை இந்நிலையில் தோனியை அணியில் விட்டு நீக்கிய தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத்தான் சுரேஷ் ரெய்னாவையும்ம் நீக்கிவிட்டு சரியான தகவல் கூறாமல் இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுரேஷ் ரெய்னா ஒரு பேட்டியில் தன்னை அணியில் விட்டு நீக்கிவிட்டு அதற்கான காரணத்தையும், நான் என்ன தவறு செய்தேன் என்பதை பற்றி என்னிடம் தேர்வுக்குழுவினர் கூறவில்லை.
அப்படி ஏதாவது என்னிடம் கூறி இருந்தால் தான் அதனை சரிசெய்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்க முடியும் அப்படி எதுவுமே சொல்லவில்லை என்று மனவருத்தத்துடன் கூறியிருந்தார்.இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் அதற்கு பதிலளித்து ரெய்னாவிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், அணியில் மீண்டும் எப்படி இடம் பிடிக்க வாய்ப்புகள் இருக்கும் என்பது பற்றியும் கூறியதாகவும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த சுரேஷ் ரெய்னா : சமீபத்தில் எம்எஸ்கே பிரசாத் என்னை அணியில் இருந்து நீக்கிவிட்டு எதுவுமே பேசவில்லை. எனக்கான நேரம் வரும்போது மட்டும் தான் நான் சிறப்பாக ஆடுவேன் என்று மட்டுமே என்னிடம் கூறினார். இவ்வாறு பதிலடி கொடுத்தார் சுரேஷ் ரெய்னா .
இப்படி பல வீரர்களை எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தகவல் தெரிவிக்காமலேயே கழட்டி விட்டது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. யுவராஜ்சிங்கிற்க்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. அம்பத்தி ராயுடு இவரைப் பற்றி முன்னதாக சர்ச்சையான ஒரு ட்வீட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எம்எஸ்கே பிரசாத் சுரேஷ் ரெய்னாவின் விஷயத்திலும் பொய் சொல்லி இருக்கிறார் என்பது அம்பலமாகிவிட்டது.

ஏற்கனவே கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தேர்வுக்குழு தலைவருக்கு தனிப்பட்ட கட்டளை ஏதும் பிறப்பித்தார்களா ? அதன்படி இவர் நடந்து கொண்டாரா ? என்று கூட பல கேள்விகள் அவரை சுற்றி இருந்தன. தற்போது ரெய்னாவும் பிரசாத் தேர்வு குறித்து எதிர்மறையான கருத்தினை கூறியுள்ளதால் அவரது பதவிக்காலத்தில் இருந்துள்ள சிக்கல்கள் தற்போது வெளிவர துவங்கியுள்ளன.



