இப்போது ஐ.பி.எல் தொடரை விட இதுவே முக்கியம். அதை பத்தி மட்டுமே நாம் யோசிக்கலாம் – ரெய்னா வேதனை

Raina
- Advertisement -

ஐ.பி.எல் ஆண்டுதோறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் கடந்த 29ம் தேதி துவங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தொடர் வரும் ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ipl cup

- Advertisement -

மேலும் இதே நிலைமை தொடர்ந்தால் இந்த வருட ஐ.பி.எல் தொடரை ரத்து செய்யவும் அதிக வாய்ப்புள்ளது என்று பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிசிசிஐ வெளியிட்ட தகவலின்படி நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். நிலைமைக்கு ஏற்றவாறு இந்த தொடரின் முடிவு அமையும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்து பேசிய சென்னை அணியின் துணை கேப்டன் ரெய்னா கூறியதாவது : உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raina

இந்தியாவிலும் இந்த பாதிப்பு காணப்படுவதால் ஐபிஎல் தொடரை விட இந்தியர்களின் ஒவ்வொரு உயிரும் மிகவும் முக்கியம் என்றும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது ஐபிஎல் தொடர் குறித்து நாம் யோசிக்கலாம். தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் உயிர் சேதத்தையும் தடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்க வேண்டும்.

- Advertisement -

இதனால் நமது உயிரைக் காத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் நாம் தற்போது உள்ளோம். சென்னை அணியின் பயிற்சி முகாம் சிறப்பாக அமைந்தது. தோனி வழக்கம்போல துடிப்புடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி செய்தார் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Dhoni

இந்த வருட ஐ.பி.எல் தொடருக்காக மார்ச் 2 ஆம் தேதியே சென்னை அணி தீவிர பயிற்சியை துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில் முரளி விஜய், ரெய்னா, ராயுடு மட்டுமின்றி தோனியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement