ரசிகர்கள் என்னை “சின்னதல” என அழைக்க இதுவே காரணம். அப்படி அழைப்பதே எனக்கு பிடிக்கும் – மனம்திறந்த ரெய்னா

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா கடந்த 12 வருடமாக அந்த அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு ரசிகர்கள் தமிழக ரசிகர்கள் பல பெயர்களை வைத்துள்ளனர். தோனிக்கு தல என்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு சின்ன தல என்றும் பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைக்கின்றனர்.

raina

- Advertisement -

கேப்டன் தோனி கூட தன்னுடைய ‘தல’ என்கிற பெயர் குறித்து அடிக்கடி பேசியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் உடன் உரையாடிய சுரேஷ் ரெய்னா சின்ன தல பெயர் குறித்து பேசியுள்ளார்.

இதில் அந்த ரசிகர் ”ஒருமுறை தல என்ற செல்ல பெயர் வைத்து தோனியிடம் கேட்டேன் நீங்க சின்ன தல என்று அழைக்கப்படும் போது எப்படி உணர்கிறீர்கள்”? என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ரெய்னா இது எனது சொந்த வீட்டை போல உணர வைக்கும் சென்னை குடும்பம் எனக்காக கொடுத்த அன்பு இது. இந்த மரியாதை, அவர்கள் என்னை ஏற்றுக்கொண்ட அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.

Raina

அவரின் இந்த பதிலை ரசிகர்கள் பலரும் வியந்து இந்த பதிவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அணியின் முக்கிய இரு வீரர்களான இவர்களை இருபெரும் சக்திகள் எனவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

தோனி மாற்றும் ரெய்னா ஆகியோர் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதை பார்க்க ஆசையாக இருந்த ரசிகர்களுக்கு இந்த ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஏமாற்றத்துடன் இந்த தொடர் துவங்குமா ? என்று காத்திருக்கின்றனர்.

Raina

ஆனால் இந்தியாவில் தற்போதும் கொரோனாவின் தாக்கம் குறையாத காரணத்தினால் இயல்பு வாழ்க்கை திரும்பவே சில மாதங்கள் ஆகும் என்பதால் இந்த வருட ஐ.பி.எல் நடைபெற சாத்தியமே இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Advertisement