டிராவிட் சொல்லி வைத்து விக்கெட்டை வீழ்த்தினார். அதும் என்ன பிளான் தெரியுமா ? – ரெய்னா பகிர்ந்த தகவல்

Raina
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல சுவாரசியமான விடயங்களை பார்த்து உள்ள நிலையில் தற்போது 2006ம் ஆண்டு ஒருநாள் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் கேப்டனாக வகுத்த திட்டம் ஒன்று குறித்த நிகழ்வினை பகிர்ந்துள்ளார் ரெய்னா.

Dravid

- Advertisement -

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் வரிசையில் பலரும் கங்குலி, தோனி, கோலி ஆகியோர் மட்டுமே பலரும் இடம் அளித்து வருகின்றனர் ஆனால் 2005-2007 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை. சமீபத்தில் கம்பீர் மற்றும் பதான் கூட ராகுல் டிராவிட் கேப்டன்சி குறித்து புகழ்ந்து பேசி இருந்தனர்.

அந்த வகையில் தற்போது ரெய்னா பகிர்ந்த தகவலில் 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது துவக்க வீரர்கள் சல்மான் பட் மற்றும் கம்ரான் அக்மல் நிதானமாக ஆடி வந்தனர். கம்ரான் அக்மல் ஒரு கட்டத்தில் ரன் குவிக்க தயாரானார்.

Raina 1

அப்போது நடந்த சம்பவத்தை பற்றி பேசிய ரெய்னா கூறுகையில் : இந்திய அணி அப்போது விக்கெட்டை வீழ்த்திய ஆகவேண்டிய நிலையில் இருந்தது. அது இந்திய அணியின் ஏழாவது ஓவர் அப்போது இர்பான் பதான் பந்து வீச வந்தார். சல்மான் பட் ஒரு ரன் ஓடினார் கம்ரான் அக்மல் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமையில் ராகுல் டிராவிட் திட்டம் தீட்டினார்.

- Advertisement -

அப்போது ராகுல் டிராவிட் நேராக ரெய்னாவிடம் சென்று பாயிண்ட் திசையில் பீல்டிங் நிற்க முடியுமா என்று கேட்டுள்ளார். நிச்சயம் நிற்க எப்படி நிற்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அதற்கு டிராவிட் பாயிண்ட் திசையில் முன்புறம் குனிந்து கேட்ச் பிடிக்க தயாராக இருக்குமாறு எனவும் கூறியுள்ளார்.

Pathan

பதான் அதற்கேற்றார்போல் ஆப் சைடில் பந்தினை விளக்கி வீச அந்த பந்தை கம்ரான் அக்மல் வேகமாக அடித்தார். பந்து நேராக ரெய்னா நின்றிருந்த பாயிண்ட் திசை நோக்கி பறந்தது. உடனே அந்த இடத்தில் சரியாக நின்றிருந்த ரெய்னா கைகளில் வந்து தஞ்சம் அடைந்தது. அவரும் அவுட்டாகி வெளியேறினார். இந்த விக்கட்டில் கேப்டன், பந்துவீச்சாளர், பீல்டர் என மூவரும் சேர்ந்து சம்பந்தப்பட்டு இருப்பது போல எனக்கு தோன்றியது என்று ரெய்னா அந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement