Suresh Raina : தோனி இல்லாத மிடில் ஆர்டரில் அழுத்தத்தை உணர்ந்தோம் – ரெய்னா பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமை

Raina-2
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 44 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான சென்னை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

Raina

இந்த போட்டியில் டாஸ் வென்று சென்னை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 48 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதி நேரத்தில் பாண்டியா அதிரடியாக 23 ரன்களை குவித்தார்.

- Advertisement -

பின்பு 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மலிங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரெய்னா கூறியதாவது : நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. ஒவ்வொரு 2-3 ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். பேட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் தேவை. இந்த தொடர் முழுவதும் பவுலிங் சிறப்பாக இருந்தது, 155 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கே. நாங்கள் பவர்பிளே ஓவர்களில் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

Watson2

மும்பை அணி சிறப்பாக விளையாடியது. மிடில் ஆர்டரில் தோனி இல்லாததால் அழுத்தத்தை உணர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம் இதுவே தோல்விக்கு காரணம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் வந்திடுவோம். எங்களது அணியில் பவர் ஹிட்டர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்களை வரிசை படுத்தி இனிவரும் போட்டிகளில் வெற்றிபெறுவோம் என்று ரெய்னா கூறினார்.

Advertisement