தோனிக்கு தல, எனக்கு சின்ன தலன்னு பெயர் வர இதுவே காரணம் – சுரேஷ் ரெய்னா வெளிப்படை

Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக விளையாடி வருபவர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி. 2008 ஆம் மகேந்திர சிங் தோனி முதல் வீரராகவும், சுரேஷ் ரெய்னா இரண்டாம் வீரராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

Raina 3

அப்போதில் இருந்து தற்போது வரை இருவரும் ஒன்றாகத்தான் பயணித்து வருகிறார்கள். தோனி அணியின் அரசனாக இருந்தால், சுரேஷ் ரெய்னா அவரது தளபதியாக இருப்பார். அப்படித்தான் இத்தனை வருடமாக விளையாடி வருகிறார்கள் . இருவரும் சேர்ந்து சென்னை அணிக்காக பல போட்டிகளை ஒன்றாக வென்று கொடுத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியிலும் பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக ஆடியவர்கள்.

அணியில் எப்படி அண்ணன் தம்பிகள் போல் இருந்தார்களோ அதே போல் தங்களது ஓய்விலும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். தோனி ஓய்வினை அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்து இருந்தார். மேலும் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

Raina

இந்நிலையில் தோனிக்கு தல என்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு சின்ன தல என்று எப்படி பெயர் வந்தது என்பது குறித்து பேசியுள்ளார் சுரேஷ் ரெய்னா. அவர் கூறுகையில்…சென்னை மக்கள் எப்போதும் எங்களுக்கு கள்ளம் கபடமற்ற அன்பை வெளிப்படுத்துவார்கள். நானும் தோணியும் அண்ணன் தம்பியை போல் பழகி வருகிறோம். அதனை பார்த்த சென்னை மக்கள் எங்களுக்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்..

- Advertisement -

Raina

இத்தனை ஆண்டுகாலம் ஒன்றாக பழகி, பயணித்து வருவதால் எங்கள் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாக தோனிக்கு தல என்றும் எனக்கு சின்ன தல என்று செல்லமாக பெயர் வைத்து அழைக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் தொடர் நன்றாக விளையாடி வருகிறோம். அவர்களை எந்த விதத்திலும் கீழே விட்டுவிட மாட்டோம் . தொடர்ந்து இந்த முறையும் நன்றாக விளையாடுவோம் . சென்னை மக்களின் அன்பின் வெளிப்பாடுதான் இந்த செல்லப்பெயர்கள் என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.