2011 உலககோப்பையை ஜெயிக்க இவரே காரணம். இவர் இருந்தாலே அது அணிக்கு தனி பலம்தான் – ரெய்னா ஓபன்டாக்

Raina
- Advertisement -

இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்பு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடைசி உலகக் கோப்பை தொடர் என்பதால் அவருக்கு இந்த தொடரை வென்று பரிசாக அளிக்க ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அணி வீரர்களும் ஆர்வமாக இருந்தனர்.

sachin

- Advertisement -

அதேபோன்று இந்த தொடரை இந்திய அணி வெற்றிபெற்று சச்சினின் கைகளில் தந்தது. அந்த நாளை மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த உலகக் கோப்பைத் தொடர் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

சச்சினுடன் இருக்கும் போது எல்லாம் சாத்தியம் தான். அவரின் அமைதி இந்திய அணியில் பல மாற்றங்களைத் தந்தது. மேலும் சச்சின் அணியில் இருந்தாலே அது ஒரு தனி பலம் தான் அவரின் மூலமாகவே நாங்கள் உலக கோப்பையை கைப்பற்றினோம். அவர் ஒருத்தர்தான் டீமில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கை அளித்தார்.

sachin

மேலும் சொல்லப்போனால் அவர் இந்திய அணியின் இரண்டாவது பயிற்சியாளர் போல இருந்தார். அவர் கொடுக்கும் ஊக்கம் நம்மை எதையும் நடத்தி காண்பிக்கும் தைரியத்தைக் கொடுக்கும். அந்த தொடரில் சச்சின் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் இரண்டாமிடம் பிடித்தார். 9 போட்டிகளில் 482 ரன்களை சச்சின் அடித்திருந்தார்.

yuvi

அதேபோன்று ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்கும் பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டிலும் அசத்த இந்திய அணி கோப்பையை வெல்ல பெரிதும் கை கொடுத்தார் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை தொடரில் தொடர் நாயகனாக யுவராஜ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Advertisement