அவர் எனக்கு அப்பா மாதிரி. அந்தர் பல்டி அடித்த ரெய்னா. சண்டையில் ஏற்பட்ட சமாதானம் – விவரம் இதோ

Raina-1

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பினார் என்றும் சில தினங்களுக்கு முன்னர் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

Raina

மேலும் ரெய்னாவின் கஷ்ட காலங்களில் எப்போதும் சிஎஸ்கே துணை நிற்கும் என்றும் அவர் பதிவிட்டு இருந்தார். அடுத்த வெளியான சில செய்திகளில் சுரேஷ் ரெய்னா சொந்த பிரச்சனை காரணமாக நாடு திரும்பவில்லை என்றும் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினாலும், தனக்கு கொடுக்கப்பட்ட அறை திருப்தியாக இல்லை என்ற காரணத்தாலும் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

அதன் பின்னர் ரெய்னாவை கண்டித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் தற்போது மீண்டும் நான் ரெய்னாவை அப்படி சொல்லவில்லை அவரைப்பற்றிய கூறிய கருத்தில் அதுபோன்ற உண்மை இல்லை என்றும் தான் அந்த அர்த்தத்தை வைத்து பேசவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரீனிவாசன் குறித்து கூறிய கருத்துக்களுக்கு ரெய்னாவிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியது.

அது குறித்து பேசிய ரெய்னா கூறுகையில் : ஸ்ரீனிவாசன் சார் எனக்கு அப்பா ஸ்தானத்தில் இருப்பவர். அவர் எப்போதும் என் பக்கத்தில் தான் இருப்பார். என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர் அவர். என்னை அவரது இளைய மகன் போல வழி நடத்தி வருகிறார். அதனால் அவர் பேசியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் திட்டியதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

- Advertisement -

Raina

நான் வெளியேறியதற்கான காரணம் உண்மையில் அது கிடையாது. அந்த உண்மை அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் இப்போது அவருக்கு தெரிந்து இருக்கலாம். அதன் பிறகு இப்போது எனக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். நாங்கள் இது குறித்து பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் எனவும் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.