பயிற்சி போட்டியில் 29 பந்துக்கு 56 ரன்கள் அதில் இத்தனை சிக்ஸர்களா ? – வீடியோ

Raina
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன. இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Dhoni

- Advertisement -

தினமும் சென்னை அணி வீரர்கள் பயிற்சி செய்து வருவது நாம் அறிந்ததே அதன்படி இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் லயன்ஸ் டீமில் ஆட்டக்காரர்கள் அருமையாக ஆடினார்கள். குறிப்பாக சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார் அதில் 6 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடங்கும்.

பேட்டிங் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா ஆடிய விதம் அவரது அதிரடி மீண்டும் மீண்டும் காண்பித்தது இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோ தற்போது சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் ரசிகர்களால் இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. சென்னை அணி குறித்து எந்த வீடியோ வெளியானாலும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement