தோனி குறித்து ரெய்னா குடுத்த வாக்குறுதி. ஆனா கடைசில அவரையே கழட்டி விட்டுட்டாங்க – என்ன கொடுமை இது?

Raina
- Advertisement -

இந்தியாவில் விரைவில் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். அந்த வகையில் அனைத்து அணிகளுக்கும் தேவையான வீரர்கள் வாங்கப்பட்டு தற்போது அனைத்து அணிகளும் அதிகாரபூர்வமாக தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டனர்.

CSK-Auction

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல வீரர்களை அணிக்கு தேர்வு செய்திருந்தாலும் சில வீரர்களை தாரை வார்த்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை அணியின் மிக முக்கிய தூண்களான ரெய்னா மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோரை அவர்கள் ஏலத்தில் தக்க வைக்காதது பெரிய அளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதில் டூபிளெஸ்ஸிஸ் ஆவது பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் சுரேஷ்ரெய்னா மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போனார். 2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யப்பட்ட ரெய்னாவை முதல் சுற்றில் யாரும் எடுக்காததால் அவர் விற்கப்படாமல் போனார். இருப்பினும் இரண்டாவது சுற்றின் போது சற்று தொகை குறைத்து சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் மீது சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டாததால் இரண்டாவது முறை ஏல பட்டியலில் அவர் பெயரை இடம்பெறாமல் போனது.

raina

இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரெய்னா விற்கப்படாமல் சென்றுள்ளார். இது சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை அணியின் துணை கேப்டனாகவும், ரசிகர்கள் மத்தியில் சின்ன தலையாகவும் இருந்து வரும் சுரேஷ் ரெய்னா இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 5528 குவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக 50+ ஸ்கோர்கள், அதிக கேட்ச்கள், பிளே ஆப் போட்டிகளில் அதிக ரன்கள், ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் என பிரம்மாண்டமான பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ள அவரை சென்னை அணி எடுக்காதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Raina-2

இந்நிலையில் சின்ன தல ரெய்னா கடந்த ஆண்டு தோனி குறித்து அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து அதே நாளன்று ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு ரெய்னா அளித்த ஒரு பேட்டியின் போது : அடுத்த சீசனில் தோனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவில்லை என்றால் நானும் விளையாட மாட்டேன். நாங்கள் இருவரும் 2008ஆம் ஆண்டு முதல் ஒன்றாகவே விளையாடி வருகிறோம். இந்த 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சீசனிலும் அவரை விளையாடுமாறு நான் கேட்டுக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க : INDvsWI டி20 தொடர் : இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் போன்ற புள்ளிவிவரம் – யாருக்கு வாய்ப்பு அதிகம்

அதன்படி கடந்த சீசனில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி சாம்பியனான நிலையில் தோனி சி.எஸ்.கே அணியால் தக்கவைக்க பட்டுள்ளார். ஆனால் ரெய்னா அணியிலேயே எடுக்கப்படாமல் போனது பரிதாபத்திற்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement