MS Dhoni : இனி தோனி கிடையாது. நான் தான் சி.எஸ்.கே அணியின் கேப்டன் – ரெய்னா பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ்

Raina-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Dhoni

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

- Advertisement -

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டி முடிந்து பேசிய ரெய்னா : இனிவரும் போட்டிகளில் தோனி சென்ற பின் அவரது இடத்தில் கேப்டனாக என்னை பார்ப்பீர்கள். ஆனால், அவர் அளவுக்கு கேப்டன்சி செய்வது என்பது இயலாத காரியம் இருப்பினும் அதற்காக நான் முயற்சி செய்வேன். தோனி சென்னை அணியில் விளையாடும் வரை விளையாடட்டும் ஏனென்றால் சென்னை அணிக்கும், தோனிக்கும் இடையேயான பந்தத்தை பற்றி நான் கூறி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை என்று கூறினார்.

- Advertisement -

Dhoni-Csk

அவர் கூறிய இந்த விடயங்களை வைத்து பார்க்கும்போது அவர் இந்த தொடரோடு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளாரோ என்று யோசிக்கவைக்கிறது. மேலும், இந்த உலககோப்பை தொடரோடு இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற பேச்சு நிலவி வருகிறது. அதனால் இந்த ஐ.பி.எல் தொடரோடு தோனி ஓய்வு பெறுவாரா என்ற எண்ணம் தோன்றுகிறது.

Dhoni

அப்படி தோனி ஓய்வு பெற்றால் அவருக்கு அடுத்து அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா தான் எனவே அவர் அப்படி கூறி இருக்கிறார். ஒருவேளை தோனி ஓய்வு பெற்றாலும் சென்னை அணியின் ஆலோசகராக அவர் தொடர்ந்து தன் பணியை சென்னை அணிக்காக செய்வார் என்று எதிர்பார்க்கலாம். மேலும், சென்னை அணியையும், தோனியையும் பிரிக்கவே முடியாது என்று தோனி ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement