- Advertisement -
ஐ.பி.எல்

CSK vs DC : விழுந்து வாரியபடி பவுண்டரி அடித்த சின்ன தல வைரலான வீடியோ – விவரம் இதோ

நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு துவக்கத்தில் வாட்சன் விக்கெட்டினை இழந்தாலும் அணியின் ரன்ரேட் உயர முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. அவர் 59 ரன்களை குவித்தார். அதில் ஆரம்பத்திலே அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் கீழே விழுந்த படி ஒரு பவுண்டரி அடித்தார். அந்த பவுண்டரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 50 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை அடித்துள்ளது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை குவித்தார். இதனால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆடிய டெல்லி 16.2 அணி ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடி 44 ரன்களை குவித்தார். சென்னை அணி சார்பாக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசி 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிரடியாக விளையாடிய தோனி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -
Published by