ராயுடுவை கட்டிதழுவி ‘சின்ன தல ரெய்னா சொன்ன ஒரு வார்த்தை என்ன தெரியுமா ..?

Raina
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் பிலே ஆப் சுற்றிற்கு ஹைதராபாத் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ள சென்னை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடுவின் அதிரடி சததால் சென்னை அணி பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றது . இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராயுடுவை சென்னை அணியின் குட்டி தல ரெய்னா கட்டி தழுவி பாராட்டியுள்ளார்.

Ambathi Rayudu

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரின் 46 வது லீக் ஆட்டம் புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் சர்வேதேச மைதானத்தில் நேற்று (மே 13) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் , அலெக்ஸ் ஹேல்ஸ் கூட்டணியில் ஹேல்ஸ் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதை தொடர்த்து விளையாடிய தவான் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 79 ரன்களை சேர்த்தார். பின்னர் களமிறங்கிய வில்லியாம்சனும் அரை சதம் அடித்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் ராயுடு கூட்டணி, தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். ஒரு கட்டத்தில் வாட்சன் 57 ரன்களில் ஆட்டமிழக்க பின்னார் களமிறங்கிய ரெய்னாவும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். ராயுடு மட்டும் நிலைத்து களத்தில் இருக்க களமிறங்கிய தோனி அவருக்கு உறுதுணையாக விளையாடி ஆதரவு கொடுத்தகர்.

dhoni

இந்த போட்டியில் 62 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த ராயுடு 7 சிக்சர்கள் மற்றும் 7 பௌண்டரிகளையும் விளாசினார். பின்னர் 19 வது ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்து உடை மாற்றும் அறைக்கு சென்ற ராயுடுவை சென்னை அணியின் சின்ன தல ரெய்னா கட்டி தழுவி “நீ கலக்கிட்ட அம்பா ” என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement