தோனியை தொடர்ந்து தீவிர பயிற்சியினை ஆரம்பித்த சி.எஸ்.கே அணியின் மூத்த வீரர்கள் – வைரலாகும் புகைப்படம்

msdhoni

இந்த ஆண்டு 13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் பயிற்சியில் இணைந்துள்ளனர்.

dhoni

கடந்த மே மாதம் 2019 ஆம் ஆண்டுக்குப் பின் ரெய்னா எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மேலும் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த அம்பத்தி ராயுடு உலகக்கோப்பை அணியில் இடம்பெறாத விரக்தியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவும் அம்பத்தி ராயுடு இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக தங்களது பயிற்சியினை துவங்கியுள்ளனர். இதனை சி.எஸ்.கே நிர்வாகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் இப்போதே இந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஏனெனில் சமீபத்தில் ராஞ்சியில் உள்ள தியோரி அம்மன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்திய தோனி ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஐ.பி.எல் தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சென்னை வீரர்களின் இந்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருவதால் வழக்கம்போல சென்னை ரசிகர்கள் இந்த வருடமும் தல தோனியின் தலைமையில் கோப்பையை கைப்பற்றும் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

- Advertisement -