மீண்டும் தோனியுடன் இணைந்த ரெய்னா. தெறிக்கவிடும் பிராக்டீஸ் வீடியோ – ரசிகர்களுக்குடபுள் ட்ரீட்

Raina

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 09 ஆம் தேதி துவங்கி மே மாதம் இறுதி வரை ஐபிஎல் தொடரின் 14 ஆவது சீசன் நடைபெற இருக்கிறது. இதற்கான பயிற்சியை அனைத்து அணிகளுக்கும் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்மாத துவக்கத்திலேயே ஆரம்பித்தது. கடந்த ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி இம்முறை தங்களது பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறது.

csk vs dc

இந்நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நாடு திரும்பிய சுரேஷ் ரெய்னா இம்முறை மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை உறுதி செய்தார். அதனை தொடர்ந்து தற்போது மும்பையில் சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சி செய்யும் வரும் சுரேஷ் ரெய்னா இந்த தொடரை எதிர்கொள்ள மிகவும் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு அணியில் இருந்து வெளியேறியதால் தோனி மற்றும் ரெய்னாவின் பிணைப்பு எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த வேளையில் தற்போது சுரேஷ் ரெய்னா பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் போது டோனியுடன் அவருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ ஒன்றினை சிஎஸ்கே அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Raina

தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் இணைந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து இருந்தனர். இந்த நிகழ்வு அவர்களுக்குள் இருக்கும் நட்பினை வெளிப்படுத்தியது. ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய ரெய்னா குறித்து தோனி எந்த கருத்தும் கூற விரும்பாததால் அவர்கள் அவர்களுக்கு இடையேயான பிணைப்பு எந்த அளவிற்கு பலமாக இருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியிருக்கும் ரெய்னாவுடன் இணைந்து தோனி பயிற்சி செய்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி வரவேற்பையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ரெய்னா இல்லாமல் பலவீனமடைந்து காணப்பட்ட சிஎஸ்கே அணி இம்முறை பல இளம் வீரர்களை ஏலம் எடுத்தது மட்டுமின்றி அணியின் அனுபவ வீரர் மற்றும் சின்ன தலயான ரெய்னாவுடன் இணைந்து உள்ளது சிஎஸ்கே அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.