தோனி பேட்டை தொட்டு கும்பிட்ட ரெய்னா. காரணம் இதுதான் – வைரலாகும் வீடியோ

Raina
- Advertisement -

இந்த வருடம் பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி துவங்க உள்ளது என்று போட்டி அட்டவணைகள் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது கொரோனா வைரஸ் தீவிரத்தின் காரணமாக இந்த போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Dhoni

- Advertisement -

இந்த தொடருக்கான சென்னை அணி வீரர்கள் பயிற்சியினை கடந்த ஒன்றாம் தேதி முதல் சென்னையில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தல தோனி மற்றும் சின்ன தல ரெய்னா ஆகியோர் தினசரி பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

சென்னை அணிக்காக பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து விளையாடி வரும் தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் இந்திய அணியிலும் ஒன்றாகவே ஆடி வந்தனர். இவர்களுக்கு இடையே உள்ள நட்பு ஒரு ஆழமான நட்பாகும். மேலும் எப்போது இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டாலும் அவர்களுக்கு இடையே நடக்கும் விடயங்கள் சற்று சுவாரஸ்யமாகவே இருக்கும்.

அந்த வகையில் தற்போது சென்னையில் பயிற்சியை மேற்கொண்டிருக்கும் தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் குறித்த விடயங்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பயிற்சியின்போது தோனி பேட்டை ரெய்னா தொட்டு வணங்குவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இது குறித்து வெளியான வீடியோவில் தோனி பேட்டை அவரது கால் திசையை நோக்கி வைக்கும்போது தெரியாமல் ரெய்னாவின் மீது பட்டதால் அவர் அந்த பேட்டை தொட்டு வணங்கினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக போட்டி தள்ளிவைக்கப்படுத்தால் இந்த பயிற்சி எத்தனை நாள் தொடரும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Advertisement