டி20 வேர்ல்டுகப் : மழையால் ஃபைனல் மேட்ச் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐசிசி ரூல்ஸ் கூறுவது என்ன?

PAK vs ENG Jose Buttler Babar Azam
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 26 முதல் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முதல் போட்டியிலிருந்தே எதிர்பாராத திருப்பங்களை அரங்கேறிய இந்த தொடரில் ஆரம்பத்திலேயே 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க முடியாமல் நடையை கட்டியது. அதை விட ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானின் கதை முடிந்ததாக கருதப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தோற்று தென்னாப்பிரிக்கா வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்த அந்த அணி வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் வலுவான இந்தியாவை 2வது அரையிறுதி போட்டியில் அசால்டாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு 1,00,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

- Advertisement -

குறுக்கே வருணபகவான்:
அந்த போட்டியில் வென்று கோப்பையை முத்தமிடுவதற்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் அங்கே பயணித்து வலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். முன்னதாக கடந்த 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த சந்தித்தாலும் அதன்பின் கொதித்தெழுந்த இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அரையிறுதிக்குள் நுழைந்து நியூசிலாந்தை தோற்கடித்து இறுதிப் போட்டியில் இதே இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. தற்போது அச்சில் வார்த்தது போல் அதே சூழ்நிலையும் ஃபைனலில் அதே எதிரணியும் வந்துள்ளதால் பாகிஸ்தான் நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஆனால் “குறுக்கே இந்த கௌஷிக் வந்தா” என்பது போல் இப்போட்டியை ரத்து செய்யும் அளவுக்கு மழை பெய்யும் என்று முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது பாகிஸ்தான் ரசிகர்களை கலக்கமடைய வைத்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் நிறைய போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஃபைனல் நடைபெறும் நவம்பர் 13ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் 8 – 20 மில்லி மீட்டர் வரை 90% இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக உள்ளூர் நேரப்படி போட்டி நடைபெறும் இரவு 7 – 11 மணி வரை முறையே 47%, 65%,80%, 82%, 79% இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலைமை வரும் என்பதற்காகவே உலகக் கோப்பைகளில் நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும் ஏற்கனவே ரிசர்வ் நாளை ஐசிசி கடைபிடித்து வருகிறது.

அந்த வகையில் ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இப்போட்டி மழையால் ரத்தாகும் பட்சத்தில் நவம்பர் 14ஆம் தேதியன்று முன்னதாகவே உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு மீண்டும் நடைபெறும். அப்போதும் மழை வந்தால் எக்ஸ்ட்ராவாக 2 மணி நேரங்கள் கொடுக்கப்படும். அதையும் தாண்டி மழை வரும் பட்சத்தில் வழக்கம் போல ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள்.

- Advertisement -

ஆனால் அதன் உச்சகட்டமாக ஐசிசியின் புதிய விதிமுறைப்படி இரு அணிகளுக்கும் தலா 10 ஓவர்கள் வரை மட்டுமே குறைத்து போட்டியை நடத்த நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதாவது இறுதிப் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும் என்று ஐசிசி புதிய விதிமுறை கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க : இப்படி நடக்கும்னு தெரியும். ஆனால் – இந்தியாவின் நிலையை முன்கூட்டியே கணித்த கபில் தேவ் தற்போது கூறுவது என்ன?

எனவே அதையும் தாண்டி மழை பெய்யும் பட்சத்தில் மற்றுமொரு விதிமுறைப்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement