- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தவான் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குகிறார். ராகுல் இந்த இடத்தில் தான் இன்று களமிறங்குவார் – வெளியான புதுத்தகவல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டியில் சுவாரசியம் அதிகமாக உள்ளது. மேலும் கேப்டன் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்த நிலவரம் புரியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் இன்றைய போட்டி சுவாரசியமாக அமைய வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்திய அணியில் பல இளம் வீரர்கள் இன்றைய போட்டியில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் பொறுத்தவரை ரோஹித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீண்டும் துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்.

அடுத்தடுத்த இடத்தில் விராட் கோலியும், ராகுல் 4ஆவது இடத்தில் விளையாடுவார் என்று அணியின் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தோனிக்கு பதிலாக பண்ட்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by