மாஸ்க் இன்றி ஊர்சுற்றிய கொல்கத்தா வீரர். 500 ரூபாய் அபராதம் விதித்து வீட்டிற்கு அனுப்பிய போலீஸ் – விவரம் இதோ

KKR
- Advertisement -

இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரானாவின் இரண்டாம் அலைக்கு, தினமும் இலட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பின் எண்ணிக்கையும் தினசரி ஆயிரக்கணக்கில் பதிவாகி வருகிறது. இந்திய அரசாங்கமானது நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக் கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வரும் இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் அதை அலட்சியப்படுத்தும் விதமாக முகக் கவசம் அணியாமல் வெளியே சென்றிருக்கிறார்.

Corona-1

- Advertisement -

மேலும் இதனால் காவல் துறையிடம் சிக்கிய அவர், முகக் கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதத்தையும் செலுத்திவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வரும் வீரரான ராகுல் திரிபாதி, நேற்று தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தபோது, கோந்த்வா நகர காவல் துறை சப் இன்ஸ்பெக்டர் சந்தோஸ் சொனவேனிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.

மேலும் போலீசிடம் சிக்கிய பிறகு தான் ஒரு பிரபலாமன கிரிக்கெட் வீரர் என்று தனது அருமை பெருமைகளை பேசிய அவரிடம், 500 ரூபாய் அபராதத்தை வசூலித்து விட்டுத்தான் அனுப்பியிருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ். இதுகுறித்து பேசிய அவர், காதி செக் போஸ்ட்டுக்கு அருகில் நாங்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சக்கர வாகனத்தில் முக கவசம் அணியாமல் ஒருவர் பயணிப்பதை பார்த்தோம். எனவே நாங்கள் அவருடைய காரை நிறுத்த வேண்டியதாயிற்று.

Tripathi

காரை நிறுத்திய அவர், எங்களிடம் தான் ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரரென்று தன்னை பற்றி பேச ஆரம்பித்தார். ஆனால் நாங்கள் அவரிடம், கொரானா விதிமுறைகளை நீங்கள் மீறியிருக்கிறீர்கள் எனவே 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்று கூறினோம். அவரும் அதனை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார் என்று அவர் கூறினார். மக்களிடையே கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது, தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் திரையில் தோன்றி மக்களிடம், முக கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று வேண்டுகோள் வைக்கும் வீடியோக்கள் போட்டிகளின் பாதியல் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டது.

tripathi 1

ஆனால் தற்போது அந்த தொடரில் பங்கேற்றிருந்த ஒரு கிரிக்கெட் வீரரே அந்த விதிமுறைகளை மீறியிருப்பதை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உண்மையிலேயே இவருக்கெல்லாம் சமூக அக்கறை என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியைக் சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர்.

Advertisement